தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் (National Archives)
ஆவணக் காப்பக உத்தியோகத்தர் தரம் III ஆட்சேர்ப்பு - 2026
தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் ஆவணக் காப்பக உத்தியோகத்தர் தரம் III (Archives Officer Grade III) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள தகுதியான இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
📅 முக்கிய திகதி
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 2026 ஏப்ரல் 10
💼 பதவி மற்றும் சம்பளம்
- பதவி: ஆவணக் காப்பக உத்தியோகத்தர் (தரம் III)
- வெற்றிடங்களின் எண்ணிக்கை: 45
- சம்பள அளவுத்திட்டம்: ரூபா 53,060 - 94,100 (MN 04 - 2025 சுற்றறிக்கையின்படி). மேலதிகமாக அரசாங்க படிகளும் வழங்கப்படும்.
- சேவை நிபந்தனை: இது ஒரு நிரந்தரமான மற்றும் ஓய்வூதிய உரித்துடைய பதவியாகும். (3 வருட தகுதிகாண் காலம்)
✅ தகைமைகள்
1. கல்வித் தகைமை:- UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை, நுண்கலை, கட்புலக் கலை, கல்வி, சட்டம் அல்லது விஞ்ஞானத்துறையில் ஒரு பட்டத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- ஆங்கில அறிவு: க.பொ.த (சா/தர) இல் ஆங்கிலத்தில் 'C' சித்தி அல்லது க.பொ.த (உ/தர) இல் ஆங்கிலத்தில் சாதாரண சித்தி அல்லது பட்டப்படிப்பை ஆங்கில மொழியில் கற்றிருத்தல் வேண்டும்.
- 21 - 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும் (2026.04.10 அன்றுள்ளபடி).
- இலங்கைப் பிரஜையாகவும் சிறந்த நன்நடத்தையுடையவராகவும் இருத்தல் அவசியம்.
📝 தெரிவு முறை
எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவர்.
எழுத்துப் பரீட்சை பாடங்கள்:
- நுண்ணறிவுத் தேர்வு (100 புள்ளிகள்)
- கிரகித்தல் (100 புள்ளிகள்)
- ஆங்கிலம் (100 புள்ளிகள்)
*ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 புள்ளிகளைப் பெறுதல் கட்டாயம்.
💰 பரீட்சைக் கட்டணம்
கட்டணம்: ரூபா 1,200
செலுத்தும் முறை: மக்கள் வங்கியின் திம்பிரிகஸ்யாய கிளை (கணக்கு இலக்கம்: 086-1001-3902-6218). தேசிய ஆவணக் காப்பக பணிப்பாளர் நாயகம் என்ற பெயரில் செலுத்தப்பட வேண்டும்.
📬 விண்ணப்பிக்கும் முறை
மாதிரி விண்ணப்பப்படிவத்தை A4 தாளில் தயாரித்து, பூர்த்தி செய்து பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
முகவரி:
தேசிய ஆவணக் காப்பக பணிப்பாளர் நாயகம்,தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்,
இல 07, பிலிப் குணவர்தன மாவத்தை,
கொழும்பு 07.
⚠️ கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் "தேசிய சுவடிக் கூடத் திணைக்களத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர் சேவை வகுதியின் காப்பக ஆவண உத்தியோகத்தர் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2026" எனக் குறிப்பிட வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு: 2026.03.13 ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானியைப் பார்க்கவும்.
