அகரம் Logo
N E W S

க.பொ.த சாதாரண தர ICT பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்: 2027 முதல் புதிய நடைமுறை!



இலங்கையின் கல்வித்துறையில் தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பாடத்திட்டத்தில் விசேட மறுசீரமைப்புகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.


முக்கிய மாற்றங்கள் மற்றும் பின்னணி

2027 ஆம் ஆண்டில் தரம் 6 க்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே 10, 11 தரங்களின் பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பது அவசியம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


காலாவதியான பாடத்திட்டம்: 

2015 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டத்தின் சில பகுதிகள் நீக்கப்பட்டு, நவீனத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளன.


யாருக்கு பொருந்தும்?: 

2027 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களும், அதற்குப் பிந்தைய மாணவர்களும் இந்த புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்களை எதிர்கொள்வர்.


புதிய பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்வது எப்படி?

மறுசீரமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்வரும் உத்தியோகபூர்வ இணையதளங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்:

 * தேசிய கல்வி நிறுவகம் (NIE): www.nie.ac.lk

 * கல்வி அமைச்சு (MOE): www.moe.gov.lk


குறிப்பு: 

புதிய மாற்றங்களுக்கு அமைவான பாடப்புத்தகங்கள் தற்போது கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் அச்சிடப்பட்டு பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும்.


நிர்வாக நடவடிக்கைகள்

இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றுநிரூபம் (Circular) ஏற்கனவே அனைத்து மாகாண, வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் மற்றும் அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்:

எதிர்வரும் பரீட்சைகளை கருத்திற் கொண்டு, பாடசாலை மட்டத்தில் இந்த புதிய மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அவதானம் செலுத்தி கற் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post