கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பம் – தகைமைக்கான இறுதி திகதியில் மாற்றம்!



நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


இந்த திருத்தத்துக்கு நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வர்த்தமானி அறிவித்தலில் தேவையான மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.


இந்த நீட்டிப்பின் மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ள அதிகளவான பட்டதாரிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விபரங்களுக்கு :



E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் - National Diploma in Teaching [ R ] ( வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ) 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். - ✅ செய்திகள் - ✅ பரீட்சை வினாத்தாள்கள் - ✅ கடந்த கால வினாத்தாள்கள் - ✅ செயலட்டைகள் - ✅ பாடக்குறிப்புக்கள் - ✅ புத்தகம் & மொடியுள் - ✅ அறிக்கைகள் - ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post