திருகோணமலை வளாகம், கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றுவதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
உடற்கல்வி அலகின் கீழ் (Physical Education Unit) பல்வேறு விளையாட்டுக்களுக்கான பயிற்றுவிப்பாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
1. பதவி விபரங்கள்:
கீழே குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுக்களுக்காக வருகைதரு போதனாசிரியர்கள் (Visiting Instructors) மற்றும் பகுதிநேர பயிற்சியாளர்கள் (Part-time Coaches) நியமிக்கப்படவுள்ளனர்:
* தடகளம் (Track and Field)
* கரப்பந்து (Volleyball)
* வலைப்பந்து (Netball)
* மேசைப்பந்து (Table Tennis)
* ஹாக்கி (Hockey)
* எல்லே (Elle)
* கராத்தே (Karate)
* டைக்குவாண்டோ (Taekwondo)
* சதுரங்கம் (Chess)
* கரம் (Carrom)
* கபடி (Kabaddi)
* உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் (Gym Trainer)
2. தேவையான தகைமைகள்:
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகைமைகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பதுடன், தேசிய அணி உறுப்பினராகவோ அல்லது தேசிய வெற்றியாளராகவோ அல்லது அதற்கு சமமான விளையாட்டுத் திறமைகளைக் கொண்டிருத்தல்.
- அல்லது க.பொ.த (உயர் தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் சித்தியடைந்து, சர்வதேச மட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருப்பதுடன் விளையாட்டுத் துறையில் 5 வருட அனுபவம் கொண்டிருத்தல்.
- அல்லது க.பொ.த (உயர் தரம்) பரீட்சையில் குறைந்தது 3 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருப்பதுடன், 9 மாதங்களுக்கு குறையாத விளையாட்டுத்துறை டிப்ளோமா மற்றும் விளையாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதில் 5 வருட அனுபவம் கொண்டிருத்தல்.
3. கொடுப்பனவு விபரங்கள்:
- வருகைதரு போதனாசிரியர்கள்: ஒரு மணித்தியாலத்திற்கு ரூபா 750/-
- பகுதிநேர பயிற்சியாளர்கள்: ஒரு மணித்தியாலத்திற்கு ரூபா 250/-.
4. விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து (www.tc.esn.ac.lk) தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனி விண்ணப்பப் படிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுயவிபரக்கோவை (CV) ஆகியவற்றை இணைத்து பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
- கடித உறையின் இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைக் குறிப்பிடவும்.
5. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
உதவிப் பதிவாளர் / முகாமையாளர் கிளை,
திருகோணமலை வளாகம், கிழக்கு பல்கலைக்கழகம்,
கோணேசபுரி, நிலாவெளி,
திருகோணமலை.
முக்கிய குறிப்புகள்:
- அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தமது நிறுவனத் தலைவரின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
- அரைகுறையாக பூர்த்தி செய்யப்பட்ட அல்லது காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்ப முடிவுத் திகதி:
- 2026 மார்ச் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும்.
விண்ணப்ப படிவங்கம் - Click Here
மேலதிக விபரங்களுக்கு: www.tc.esn.ac.lk
Tags
Vacancy
