அனுமதித் தகைமைகள்
1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து, குறைந்தபட்சம் மூன்று (03) ஆண்டுகள் பட்டப்படிப்புடன் SLQF நிலை 5 அல்லது அதற்கு மேல், குறைந்தது தொண்ணூறு (90) திறமை மட்டங்ளை பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
2. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மூதவையினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சமமான தகைமையை பெற்றிருத்தல் வேண்டும்
மற்றும்
3. அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையொன்றில் ஆசிரியராகவோ அல்லது அதிபராகவோ, அல்லது சேவையில் உள்ள ஆசிரிய ஆலோசகராக வோ, ஆசிரியர் பயிற்றுவிப்பாளராகவே, அல்லது இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) அதிகாரியாகவோ, மேலும் பல்கலைக் கழகம், தேசிய கல்வியியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி அல்லது ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றின் முழுநேர விரிவுரையாளர், அல்லது ஆசிரியர் மைய முகாமையாளர், தேசியக் கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளராக, அல்லது இலங்கை திறந்த பல்கலைக்கழக முதவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வித் துறையில் பணிபுரியும் பிற தகுதியான நிபுணராகவோ இருத்தல் வேண்டும்.
* அனைத்து நுழைவுத் தகுதிகளும் பதிவுத் திகதியன்று பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்,
விண்ணப்ப விபரங்கள்
- விண்ணப்ப கட்டணம் : ரூபாய். 1,500.00/-
- விண்ணப்பம் வழங்கும் திகதி: 15.12.2025
- விண்ணப்ப முடிவுத்திகதி : 20.01.2026
- மொழி மூலம் : தமிழ், ஆங்கிலம், சிங்களம்
- காலம் 15 மாதங்கள்
- Online மூலமாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்.
தெரிவுப்பரீட்சை
- திகதி - 07 பெப்ரவரி 2026
- நேரம் - மு. ப. 10.00 - மு. ப. 11.00
விண்ணப்பப்படிவ கட்டணம் வரவட்டை/ கடனட்டை மூலம் இணையத்தினூடக செலுத்தப்படுதல் வேண்டும். திறந்த பல்கலைகழத்தின் பிராந்திய நிலையங்கள் அல்லது ஏனைய கற்றல் நிலையங்களிலும் நேரடியாகத் தங்களது கட்டணத்தைச் செலுத்த முடியும்.



