E-Akaram
E-AKARAM
TOP NEWS
Fetching updates...

அஸ்வெசும தகுதியுடையோரின் புதிய பெயர் பட்டியல் | மேன்முறையீடு / ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் முறை

தகுதியுடையோரின் புதிய பெயர் பட்டியல் வெளியீடு – மேன்முறையீடுகள் / ஆட்சேபனைகளைக் கோருதல்

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரிச் சட்டத்தின் II ஆம் உறுப்புரையின் பிரகாரம், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்காகத் தகுதியுடையோரின் பெயர் பட்டியலை வெளியிடுதல் மற்றும் அப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பெயர்களின் உரிமை கோரல் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலாகும்.

இரண்டாவது பெயர் பட்டியல்2026 நவம்பர்
மேன்முறையீடு ஏற்கும் இறுதி நாள்2026 நவம்பர் 11

தகுதியுடையோரின் பெயர் பட்டியலை வெளியிடுதல்

  • அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற்ற மற்றும் பெறாத குடும்பங்கள்/நபர்களின் தகவல்களை இறைப்படுத்தியதன் பின்னர், புதிய தகுதியுடையோரின் பெயர் பட்டியல் அனைத்துப் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்களின் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  • பெயர் பட்டியல் 2 கட்டங்களின் கீழ் வெளியிடப்படுகிறது. இரண்டாவது பெயர் பட்டியல் 2026 நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பெயர் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபையின் இணையத் தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேன்முறையீடுகள் / ஆட்சேபனைகளைக் கோரல்

  • காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலுக்கேற்ப நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதி பெறாத அல்லது குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகள் பிரிவு தொடர்பில் திருப்தியடையாத குடும்பங்கள்/நபர்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
  • வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியலில் அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியற்ற குடும்பங்கள் அல்லது நபர்கள் இருப்பின் மற்றும் அத்தகுதியின்மையை உறுதிப்படுத்த முடியுமாயின், அத்தகைய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க முடியும்.

மேன்முறையீடுகள் / ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் முறை

— அல்லது —

  • விண்ணப்பப் படிவங்கள் மூலமும் மேன்முறையீடுகள் / ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம். படிவங்களைப் பதிவிறக்கம் செய்ய www.wbb.gov.lk இணையத் தளத்திற்குள் பிரவேசிக்கவும்.

— அல்லது —

  • பிரதேச செயலகம் அல்லது கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரிவுக்கான அஸ்வெசும விடயத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடமிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, தான் வசித்துவரும் பிரதேச செயலகத்தின் நலன்புரித் தகவல் பிரிவில் கையளிக்கலாம்.
  • மேன்முறையீடு சமர்ப்பிப்பதற்கு பிரதான விண்ணப்பப் படிவத்துடன் மேலதிகமாக A மற்றும் B படிவங்களையும் கட்டாயமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பொது ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும்போது பிரதான விண்ணப்பப் படிவத்திற்கு மேலதிகமாக C படிவத்தையும் பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.
  • பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் பிரிவின் உத்தியோகத்தர்களின் தொழில்நுட்ப உதவியுடன் இணையவழியில் மேன்முறையீடுகள் / ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம்.
  • பிரதேசத்தில் அங்கீகாரம் பெற்ற தகவல் தொடர்பு மையங்கள் (Communication Center) மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விசேட விடயங்கள்

  • ஒரு மேன்முறையீட்டாளரினால் ஒரு மேன்முறையீடு மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
  • தனது பெயரைக் குறிப்பிடாமலும் பொது ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
  • தபால், மின்னஞ்சல் (E-mail) அல்லது நேரடியாகக் கொண்டுவந்து கையளிக்கப்படும் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பொறுப்பேற்கப்படமாட்டாது.
கவனம்: மேன்முறையீடுகளைத் தரவுத் தளத்தில் உள்ளீர்க்கும்போது, அனைத்து மேன்முறையீட்டாளர்களும் செயற்பாட்டிலிருக்கும் சரியான கையடக்கத் தொலைபேசி (Mobile) இலக்கத்தை வைத்திருத்தல் வேண்டும். தரவுத் தளத்தில் குறிப்பிடப்பட்ட இலக்கம் தவறானதாகவோ செயற்படாமலிருப்பின், பிரதேச செயலகத்திற்குச் சென்று புதிய இலக்கத்தைப் புதுப்பிக்கவும் (Update).
மேன்முறையீடுகள் / ஆட்சேபனைகள் பொறுப்பேற்கும் பணிகள் 2026 நவம்பர் மாதம் 11 ஆம் திகதியுடன் முடிவடையும்.
சுபசாதக பிரதிபலன் மண்டலய – நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board)
ஜே.ஆர். ஜயவர்தன மத்திய நிலையம், இல.191, தர்மபால மாவத்தை, கொழும்பு 07
தொலைபேசி: 0112 196 618 | தொலைநகல்: 0112 196 613 | துரித இலக்கம்: 1924
« புதிய பதிவு பழைய பதிவு »
E- AKARAM | S DILEKSHAN

Posted by

S. DILEKSHAN [ NDT ]

Comments

E-AKARAM ×