N E W S

இலங்கை சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை – வேலைவாய்ப்பு 2026

இலங்கை சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை – வேலைவாய்ப்பு 2026

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு – தகுதியும் ஆற்றலும் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.10.15 – காலக்கெடுவுக்குப் பின் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

வெற்றிடங்களின் சுருக்கம்

பதவிவெற்றிடம்சம்பள அளவுத்திட்டம் (ரூ.)வயது
பிரதி பணிப்பாளர் நாயகம் (HM 2-1)01161,140 – 219,34035 – 55
சிரேஷ்ட முகாமையாளர் பிரிவு – பணிப்பாளர்கள் (HM 1-3)03152,500 – 214,00035 – 55
நடுத்தர முகாமையாளர் பிரிவு – உதவிப் பணிப்பாளர்கள் (MM 1-3)குறிப்பிடப்படவில்லை96,650 – 173,20022 – 45
சபைச் செயலாளர் (MM 1-2)0194,170 – 170,72022 – 45
அபிவிருத்தி உத்தியோகத்தர் (MA 3)0353,940 – 94,98022 – 45
முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பமற்றது (MA 1-2)0446,220 – 84,35018 – 45
சாரதி (PL 3)0343,280 – 67,04018 – 45
அலுவலக உதவியாளர் (KKS)0340,500 – 62,53018 – 45

உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு உயர் வயது எல்லை பொருந்தாது (அலுவலக உதவியாளர் பதவிக்கு உள்ளக தகுதி குறிப்பிடப்படவில்லை).

பதவிகளும் தகுதிகளும்

1. பிரதி பணிப்பாளர் நாயகம் (HM 2-1)01 பதவி

வெளி விண்ணப்பதாரிகள் (பின்வருவனவற்றில் 1 அல்லது 2)

தகுதி 1

சட்டம், வணிக நிர்வாகம், பொருளியல், வணிகவியல், பொது நிர்வாகம் அல்லது பதவிக்குப் பொருத்தமான வேறு துறையில் UGC அங்கீகாரம் பெற்ற பட்டம்

மற்றும்

தொடர்புடைய துறையில் முதுமாணிப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் Chartered நிறுவனத்தின் இணை உறுப்புரிமை

மற்றும்

முதல் பட்டம் பெற்ற பின், கூட்டுத்தாபனம் / சட்டரீதியான சபை / நிறுவனம் அல்லது நன்கு அறியப்பட்ட தனியார் நிறுவனத்தில் குறைந்தது 17 ஆண்டுகள் முகாமைத்துவ மட்ட அனுபவம் (இதில் 3 ஆண்டுகள் சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்தில்)

தகுதி 2

சட்டம், வணிக நிர்வாகம், பொருளியல், வணிகவியல் அல்லது பொது நிர்வாகத்தில் UGC அங்கீகாரம் பெற்ற பட்டம்

மற்றும்

தொடர்புடைய துறையில் கலாநிதிப் பட்டம் (PhD)

மற்றும்

PhD பெற்ற பின் கூட்டுத்தாபனம் / சபை / நன்கு அறியப்பட்ட வணிக நிறுவனத்தில் சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்

உள்ளக விண்ணப்பதாரிகள்

  • பதவிக்குரிய துறையில் சிரேஷ்ட முகாமையாளர் (HM) பிரிவில் குறைந்தது 4 ஆண்டுகள் திருப்திகரமான சேவை
  • பல்துறைக் குழுக்களை வழிநடத்தும் நிரூபிக்கப்பட்ட ஆற்றலும், மனித மற்றும் ஏனைய வளங்களை முறையாகப் பயன்படுத்தி முகாமை செய்த அனுபவமும்
சம்பள அளவுத்திட்டம் (HM 2-1 – 2025)ரூ. 161,140 – 12 x 4,850 – 219,340
வயது35 – 55 (உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு உயர் வயது எல்லை இல்லை)
2. சிரேஷ்ட முகாமையாளர் பிரிவு (HM 1-3)03 பதவிகள்
  • பணிப்பாளர் (நிதி) – 01
  • பணிப்பாளர் (சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு) – 01
  • பணிப்பாளர் (உரிமம் வழங்கல் மற்றும் கண்காணிப்பு) – 01

பணிப்பாளர் (நிதி)

வெளி விண்ணப்பதாரிகள் (1 அல்லது 2)
  1. நிதி, கணக்கியல், வணிக நிர்வாகம், வணிகவியல் அல்லது தொடர்புடைய துறையில் UGC அங்கீகாரம் பெற்ற பட்டம் உடன் முதுமாணிப் பட்டம் அல்லது Chartered நிறுவனத்தின் இணை உறுப்புரிமை மற்றும் முதல் பட்டத்தின் பின் கூட்டுத்தாபனம் / சட்டரீதியான சபை / நன்கு அறியப்பட்ட தனியார் நிறுவனத்தில் குறைந்தது 13 ஆண்டுகள் முகாமைத்துவ மட்ட அனுபவம்
  2. தொடர்புடைய துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் Chartered நிறுவனத்தின் முழு (Fellow) உறுப்புரிமை மற்றும் குறைந்தது 13 ஆண்டுகள் முகாமைத்துவ மட்ட அனுபவம்
உள்ளக விண்ணப்பதாரிகள் (1 அல்லது 2)
  1. வெளி விண்ணப்பதாரிகளுக்கான தகுதிகளைப் பெற்றிருத்தல்
  2. பதவிக்குரிய துறையில் முகாமையாளர் (MM) தரம் I இல் குறைந்தது 3 ஆண்டுகள் திருப்திகரமான சேவை மற்றும் தொடர்புடைய துறையில் முதுமாணிப் பட்டம் அல்லது Chartered நிறுவனத்தின் இணை உறுப்புரிமை

பணிப்பாளர் (சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு)

வெளி விண்ணப்பதாரிகள்
  • இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக இருத்தல் உடன் பதவிக்குரிய துறையில் முதுமாணிப் பட்டம் மற்றும் முதல் பட்டத்தின் பின் கூட்டுத்தாபனம் / சட்டரீதியான சபை / நன்கு அறியப்பட்ட தனியார் நிறுவனத்தில் குறைந்தது 13 ஆண்டுகள் முகாமைத்துவ மட்ட அனுபவம்
உள்ளக விண்ணப்பதாரிகள் (1 அல்லது 2)
  1. வெளி விண்ணப்பதாரிகளுக்கான தகுதிகளைப் பெற்றிருத்தல்
  2. முகாமையாளர் (MM) தரம் I இல் குறைந்தது 3 ஆண்டுகள் திருப்திகரமான சேவை மற்றும் தொடர்புடைய துறையில் முதுமாணிப் பட்டம்

பணிப்பாளர் (உரிமம் வழங்கல் மற்றும் கண்காணிப்பு)

வெளி விண்ணப்பதாரிகள் (1 அல்லது 2)
  1. சட்டம், பொது நிர்வாகம், வணிக நிர்வாகம், பொது முகாமைத்துவம், வணிகவியல் அல்லது தொடர்புடைய துறையில் UGC அங்கீகாரம் பெற்ற பட்டம் உடன் முதுமாணிப் பட்டம் அல்லது Chartered நிறுவனத்தின் இணை உறுப்புரிமை மற்றும் முதல் பட்டத்தின் பின் குறைந்தது 13 ஆண்டுகள் முகாமைத்துவ மட்ட அனுபவம்
உள்ளக விண்ணப்பதாரிகள் (1 அல்லது 2)
  1. வெளி விண்ணப்பதாரிகளுக்கான தகுதிகளைப் பெற்றிருத்தல்
  2. முகாமையாளர் (MM) தரம் I இல் குறைந்தது 3 ஆண்டுகள் திருப்திகரமான சேவை மற்றும் தொடர்புடைய துறையில் முதுமாணிப் பட்டம்
சம்பள அளவுத்திட்டம் (HM 1-3 – 2025)ரூ. 152,500 – 15 x 4,100 – 214,000
வயது35 – 55 (உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு உயர் வயது எல்லை இல்லை)
3. நடுத்தர முகாமையாளர் பிரிவு (MM 1-3) – உதவிப் பணிப்பாளர்கள்MM 1-3
  • உதவிப் பணிப்பாளர் (மனிதவளம் மற்றும் நிர்வாகம்)
  • உதவிப் பணிப்பாளர் (நிதி)
  • உதவிப் பணிப்பாளர் (சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு)
  • உதவிப் பணிப்பாளர் (உரிமம் வழங்கல் மற்றும் கண்காணிப்பு)

உதவிப் பணிப்பாளர் (மனிதவளம் மற்றும் நிர்வாகம்)

வெளி: மனிதவள முகாமைத்துவம், பொது நிர்வாகம், வணிக நிர்வாகம், பொது முகாமைத்துவம் அல்லது தொடர்புடைய துறையில் UGC அங்கீகாரம் பெற்ற பட்டம் மற்றும் முதல் பட்டத்தின் பின் குறைந்தது 1 ஆண்டு அனுபவம்

உள்ளக: வெளி விண்ணப்பதாரிகளுக்கான தகுதிகளைப் பெற்றிருத்தல்

உதவிப் பணிப்பாளர் (நிதி)

வெளி: நிதி, கணக்கியல், வணிக நிர்வாகம், வணிகவியல் அல்லது தொடர்புடைய துறையில் UGC அங்கீகாரம் பெற்ற பட்டம் மற்றும் முதல் பட்டத்தின் பின் குறைந்தது 1 ஆண்டு அனுபவம்

உள்ளக: வெளி விண்ணப்பதாரிகளுக்கான தகுதிகளைப் பெற்றிருத்தல்

உதவிப் பணிப்பாளர் (சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு)

வெளி: இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக இருத்தல் மற்றும் முதல் பட்டத்தின் பின் தொடர்புடைய துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்

உள்ளக: வெளி விண்ணப்பதாரிகளுக்கான தகுதிகளைப் பெற்றிருத்தல்

உதவிப் பணிப்பாளர் (உரிமம் வழங்கல் மற்றும் கண்காணிப்பு)

வெளி: சட்டம், பொது நிர்வாகம், வணிக நிர்வாகம், பொது முகாமைத்துவம் அல்லது தொடர்புடைய துறையில் UGC அங்கீகாரம் பெற்ற பட்டம் மற்றும் முதல் பட்டத்தின் பின் குறைந்தது 1 ஆண்டு அனுபவம்

உள்ளக: வெளி விண்ணப்பதாரிகளுக்கான தகுதிகளைப் பெற்றிருத்தல்

சம்பள அளவுத்திட்டம் (MM 1-3 – 2025)ரூ. 96,650 – 10 x 2,480 – 15 x 3,450 – 173,200
வயது22 – 45 (உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு உயர் வயது எல்லை இல்லை)
4. சபைச் செயலாளர் (MM 1-2)01 பதவி

வெளி விண்ணப்பதாரிகள் (1 அல்லது 2)

  1. சட்டம், முகாமைத்துவம், வணிக நிர்வாகம், பொது நிர்வாகம், வணிகவியல் அல்லது தொடர்புடைய துறையில் UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகப் பட்டம் உடன் கம்பனிச் செயலாளர் மற்றும் கூட்டாண்மை ஆளுகைத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் தகைமையும், அத்துறையில் தகைமை பெற்ற பின் குறைந்தது 1 ஆண்டு அனுபவமும்
  2. இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக இருத்தல் மற்றும் கம்பனிச் செயலாளர் மற்றும் கூட்டாண்மை ஆளுகைத் துறையில் தகைமை பெற்ற பின் குறைந்தது 1 ஆண்டு அனுபவம்

உள்ளக விண்ணப்பதாரிகள்

மேற்கூறிய வெளி விண்ணப்பதாரிகளுக்கான தகுதிகளைப் பெற்றிருத்தல்

சம்பள அளவுத்திட்டம் (MM 1-2 – 2025)ரூ. 94,170 – 10 x 2,480 – 15 x 3,450 – 170,720
வயது22 – 45 (உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு உயர் வயது எல்லை இல்லை)
5. அபிவிருத்தி உத்தியோகத்தர் (MA 3)03 பதவிகள்

வெளி விண்ணப்பதாரிகள்

வணிக நிர்வாகம், வணிக முகாமைத்துவம், பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், வணிகவியல் அல்லது பதவிக்குப் பொருத்தமான வேறு துறையில் UGC அங்கீகாரம் பெற்ற பட்டம்

சம்பள அளவுத்திட்டம் (MA 3 – 2025)ரூ. 53,940 – 10 x 800 – 11 x 1,190 – 10 x 1,320 – 5 x 1,350 – 94,980
வயது22 – 45 (உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு உயர் வயது எல்லை இல்லை)
6. முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பமற்றது (MA 1-2)04 பதவிகள்

வெளி விண்ணப்பதாரிகள்

  1. க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்து, சிங்களம்/தமிழ், ஆங்கில மொழி, கணிதம் உள்ளடங்கலாக நான்கு பாடங்களில் திறமைச் சித்தி
  2. க.பொ.த (உ/த) பரீட்சையில் (பொது ஆங்கிலம் தவிர) மூன்று பாடங்களில் சித்தி

உள்ளக விண்ணப்பதாரிகள்

முதனிலை திறன்மிகு, அரைத்திறன் மற்றும் திறனற்ற பிரிவு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்:

  • கல்வி: க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்து, சிங்களம்/தமிழ், ஆங்கில மொழி, கணிதம் உள்ளடங்கலாக நான்கு பாடங்களில் திறமைச் சித்தி
  • சேவை: மேற்கூறிய ஊழியர் பிரிவில் நிரந்தரப் பதவியில் குறைந்தது 5 ஆண்டுகள் திருப்திகரமான சேவை
சம்பள அளவுத்திட்டம் (MA 1-2 – 2025)ரூ. 46,220 – 10 x 540 – 7 x 630 – 12 x 1,080 – 12 x 1,280 – 84,350
வயது18 – 45 (உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு உயர் வயது எல்லை இல்லை)
7. சாரதி (PL 3)03 பதவிகள்

வெளி விண்ணப்பதாரிகள்

  1. க.பொ.த (சா/த) பரீட்சையில் அதிகபட்சம் இரு தடவைகளில் ஆறு பாடங்களில் சித்தியடைந்து, குறைந்தது இரு பாடங்களில் திறமைச் சித்தி
  2. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் அனுமதிப்பத்திரம் பெற்ற பின் குறைந்தது 3 ஆண்டுகள் வாகனம் செலுத்திய அனுபவம்

உள்ளக விண்ணப்பதாரிகள்

  1. கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் குறைந்தது 3 ஆண்டுகள் வாகனம் செலுத்திய அனுபவம்
  2. முதனிலை அரைத்திறன் (PL2) அல்லது முதனிலை திறனற்ற (PL1) பிரிவில் குறைந்தது 5 ஆண்டுகள் திருப்திகரமான சேவை
சம்பள அளவுத்திட்டம் (PL 3 – 2025)ரூ. 43,280 – 10 x 490 – 10 x 540 – 10 x 590 – 12 x 630 – 67,040
வயது18 – 45 (உள்ளக விண்ணப்பதாரிகளுக்கு உயர் வயது எல்லை இல்லை)
8. அலுவலக உதவியாளர் (KKS)03 பதவிகள்

வெளி விண்ணப்பதாரிகள்

க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்

சம்பள அளவுத்திட்டம் (PL 1 – 2025)ரூ. 40,500 – 10 x 450 – 10 x 490 – 7 x 540 – 15 x 590 – 62,530
வயது18 – 45

சம்பளம்: 2027.01.01 வரை MSD சுற்றறிக்கை இல. 01/2025 இன் அட்டவணை II இன் படி வழங்கப்படும்.

பொது தகைமைகள் (அனைத்துப் பதவிகளுக்கும்)

  • விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • பதவியின் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றவும், தீவின் எப்பகுதியிலும் சேவையாற்றவும் உடல், உள ரீதியாகத் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
  • சிறந்த ஒழுக்கப் பண்புடையவராக இருத்தல் வேண்டும்.
  • வயது 2026.10.15 ஆம் திகதியன்று 18 இற்குக் குறையாமலும் 45 இற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும் (மேலே பதவிவாரியாகக் குறிப்பிடப்பட்ட வயது எல்லைகளையும் பார்க்கவும்).

நியமனத்தின் தன்மை: ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்துடன் (ETF) கூடிய நிரந்தர நியமனம்.

விண்ணப்பிக்கும் முறை

  • சுயவிவரக் குறிப்பு (CV), கல்வி, தொழில்சார் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் பிரதிகளுடன், உறவினரல்லாத இரு நடுவர்களின் (referees) தொடர்பு விபரங்களையும் இணைக்கவும்.
  • அரசு / கூட்டுத்தாபனம் / சட்டரீதியான சபைகளில் பணியாற்றுவோர், விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் ஊடாக அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் பதவியை உறையின் இடது மேல் மூலையில் தெளிவாகக் குறிப்பிடவும்.
  • விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Chairman / Director General
Gambling Regulatory Authority
Room No 2-212,
Bandaranaike Memorial International Conference Hall,
Colombo 07.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.10.15

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்க

தகவல் மூலம்: அதிகாரசபையின் வேலைவாய்ப்பு அறிவித்தல். விண்ணப்பிக்கும் முன் அசல் அறிவித்தலைச் சரிபார்க்கவும். – e-akaram.edu.lk

Post a Comment

Previous Post Next Post