N E W S

மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) - வேலைவாய்ப்பு 2026

மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) - வெற்றிடங்கள் 2026

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு | ஒப்பந்த அடிப்படை

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB), கீழ்க்காணும் 04 பதவிகளுக்கு இலங்கைப் பிரஜைகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்களைக் கோருகின்றது.

விண்ணப்ப இறுதித் திகதி: 2026.10.05 (ஒன்லைன் மூலம் மட்டும்)

பதவிகள்

இல.பதவி
01சூழல் விஞ்ஞானி (Environmental Scientist)
02தொழில்நுட்ப உதவியாளர் - ஆய்வுகூடப் பணிகள்
03ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் (Laboratory Technician)
04ஆய்வுகூட உதவியாளர் (Laboratory Helper)

கல்வித் தகைமைகள் மற்றும் கடமைகள்

01. சூழல் விஞ்ஞானி (Environmental Scientist)

தகைமைகள் (A, B, C இல் ஏதேனும் ஒன்று)

  • A: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அங்கீகரித்த சூழல் விஞ்ஞானம் / சூழல் முகாமைத்துவம் / சூழல் தொழில்நுட்பத் துறையில் 4 வருட விஞ்ஞானமாணிப் பட்டம் மற்றும் அரச சேவை / கூட்டுத்தாபனம் / சட்டரீதியான சபை / நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனத்தில் தகைமை பெற்ற பின் 01 வருட தொடர்புடைய அனுபவம்.
  • B: மேற்படி துறைகளில் UGC அங்கீகரித்த விஞ்ஞானமாணிப் பட்டம் / தகைமை மற்றும் மேற்படி நிறுவனங்களில் 05 வருட தொடர்புடைய அனுபவம் மற்றும் இலங்கை சூழல் தொழில்வல்லுநர் நிறுவனத்தின் (IEPSL) இணை / உயர்மட்ட உறுப்புரிமை.
  • C: UGC அங்கீகாரம் பெற்ற விஞ்ஞானமாணிப் பட்டம் (IEPSL இணை / உயர்மட்ட உறுப்புரிமைக்குச் சேர்வதற்கு அங்கீகரிக்கப்பட்டது) மற்றும் சூழல் விஞ்ஞானம் / முகாமைத்துவம் / தொழில்நுட்பத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா / முதுமாணிப் பட்டம் மற்றும் குறைந்தது 01 வருட தொடர்புடைய அனுபவம்.

முக்கிய கடமைகள்

  • சூழல் ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் (IEE, EIA) தயாரித்தல்; கள ஆய்வுகளை ஒழுங்குபடுத்தல்.
  • காற்று, நீர், ஒலி தொடர்பான சூழல் மாதிரி ஆய்வுகள்; கண்காணிப்புத் திட்டங்கள் மற்றும் மாதிரி எடுப்புத் திட்டங்களை முன்வைத்தல்.
  • கண்காணிப்புத் தளங்களைப் பரிசோதித்தல்; கீழ்நிலை அதிகாரிகளுக்கு வழிகாட்டல் மற்றும் பயிற்சி (CPD) வழங்குதல்.
  • மூத்த முகாமைத்துவத்திற்கு உதவுதல்; மேற்பார்வை அதிகாரிகள் வழங்கும் ஏனைய கடமைகள்.
02. தொழில்நுட்ப உதவியாளர் (ஆய்வுகூடப் பணிகள்)

தகைமைகள் (a, b, c அனைத்தும் அவசியம்)

  • (a) க.பொ.த (சா/த) - சிங்களம்/தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட 06 பாடங்களில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல் சித்தி; கணிதம், விஞ்ஞானம் உட்பட 04 பாடங்களில் திறமைச் சித்தி.
  • (b) க.பொ.த (உ/த) - பொதுப் பத்திரம் தவிர்ந்த 03 பாடங்களில் (பௌதீகவியல் மற்றும் கணிதம் அல்லது இரசாயனவியல் உட்பட) இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல் சித்தி.
  • (c) தொழிற்கல்வி மற்றும் பயிற்சி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட, NVQ மட்டம் 5 இற்குக் குறையாத தொடர்புடைய டிப்ளோமா / சான்றிதழ் கற்கை.

முக்கிய கடமைகள்

  • ஆய்வுகூட உபகரணங்கள், இரசாயனங்களைப் பாதுகாப்பாகக் கையாளுதல்; ஆய்வுகூடத்தைச் சீராகப் பேணுதல்.
  • ஆய்வுகூட மற்றும் கள (in-situ) பரிசோதனைகள், பதிவுகள், பரிசோதனை அறிக்கைகளைப் பராமரித்தல்.
  • ஆய்வுகூட ஊழியர்களை மேற்பார்வை செய்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பயிற்றுவித்தல்; முடிவுகளின் இரகசியத்தைப் பேணுதல்.
03. ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்

தகைமைகள்

  • க.பொ.த (சா/த) - சிங்களம்/தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் உட்பட 06 பாடங்களில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல் சித்தி.
  • மற்றும் TVEC அங்கீகரித்த நிறுவனத்தில் NVQ மட்டம் 4 இற்குக் குறையாத தொடர்புடைய சான்றிதழ் கற்கை அல்லது க.பொ.த (உ/த) இரசாயனவியல், பௌதீகவியல் உட்பட 03 பாடங்களில் (பொதுப் பத்திரம் தவிர) சித்தி.

முக்கிய கடமைகள்

  • ஆய்வுகூட உபகரணங்களைப் பாதுகாப்பாகக் கையாளுதல்; ஆய்வுகூடத் தூய்மை மற்றும் தரத்தைப் பேணுதல்.
  • மேற்பார்வையாளர் / விஞ்ஞானி / இரசாயனவியலாளருக்கு உதவுதல்; ஆய்வுகூட மற்றும் கள பரிசோதனை அறிக்கைகளைப் பராமரித்தல்.
04. ஆய்வுகூட உதவியாளர் (Laboratory Helper)

தகைமைகள்

  • க.பொ.த (சா/த) - சிங்களம்/தமிழ் மற்றும் கணிதம் உட்பட 06 பாடங்களில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல் சித்தி; குறைந்தது 05 பாடங்கள் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல்.
  • மற்றும் தொடர்புடைய துறையில் 06 மாதங்களுக்குக் குறையாத (720 மணித்தியாலங்களுக்குக் குறையாத) தொழில்நுட்பக் கற்கை; NVQ மட்டம் 2 அல்லது 3 (TVEC அங்கீகாரம்).

முக்கிய கடமைகள்

  • ஆய்வுகூடத்தைத் தூய்மையாகப் பேணுதல்; இரசாயனங்கள், உபகரணங்களைப் பாதுகாப்பாகக் கையாளுதல்.
  • பரிசோதனை மாதிரிகளைப் பெறுதல், சேகரித்தல், சேமித்தல், முறையாக அகற்றுதல்; உபகரணங்களைப் பொருத்துதல் மற்றும் பராமரித்தல்.

சம்பளம் மற்றும் ஏனைய நன்மைகள்

  • தகைமை மற்றும் அனுபவத்திற்கேற்ப பொருத்தமான சம்பளப் புள்ளியில் தெரிவு செய்யப்பட்டோர் நியமிக்கப்படுவர்.
  • சம்பளத்தின் 12% ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் (EPF), 3% ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கும் (ETF) பணியகத்தினால் செலுத்தப்படும்.

தெரிவு முறை

நேர்முகத் தேர்வுக் குழுவினால் தீர்மானிக்கப்படும் தகுதி வரிசையின் அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும்.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ளோர் CECB இன் ஒன்லைன் ஆட்சேர்ப்பு இணையத்தளம் மூலம் 2026.10.05 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய அறிவித்தல்:
  • ஒப்பந்த அடிப்படையில் தெரிவாகுவோர், பணியகத்தில் நிரந்தர நியமனம் கோர உரிமையற்றவர்கள்.
  • இறுதித் திகதியின்படி தேவையான தகைமைகளும் அனுபவமும் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
  • கல்வி / தொழில்சார் சான்றிதழ்கள் மற்றும் சேவைக் கடிதங்களின் பிரதிகளை இணைக்கத் தவறினால், அறிவித்தலின்றி விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மூலம்: மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) - தலைவர்

பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்

WhatsApp Channel இல் இணைய

Post a Comment

Previous Post Next Post