N E W S

இலங்கை அரச கணக்காய்வு சேவை - கணக்காய்வு அலுவலர் - திறந்த போட்டிப் பரீட்சை - 2026

இலங்கை அரச கணக்காய்வு சேவை - கணக்காய்வு அலுவலர் (III ஆம் வகுப்பு, II ஆம் தரம்) திறந்த போட்டிப் பரீட்சை - 2026

கணக்காய்வு சேவை ஆணைக்குழு

244பதவி வெற்றிடங்கள்
22 - 35வயதெல்லை (திருத்தப்பட்டது)
ரூ. 1,200பரீட்சைக் கட்டணம்
ரூ. 64,610ஆரம்ப சம்பளம்
முக்கிய திருத்த அறிவித்தல் (வர்த்தமானி இல. 2506 - 2026.09.11)
  • வயதெல்லை: 22 வயதுக்குக் குறையாமலும் 35 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும் (முன்னர் 28).
  • தகைமைகள் அனைத்தும் 2026 ஒக்டோபர் 12 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்ப இறுதித் திகதி 2026 நவம்பர் 12 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

முக்கிய திகதிகள்

விடயம்திகதி
நிகழ்நிலை விண்ணப்பங்கள் ஆரம்பம்2026 செப்டம்பர் 14 (முற்பகல் 9.00)
தகைமைகள் பூர்த்தியாக வேண்டிய திகதி2026 ஒக்டோபர் 12
விண்ணப்ப இறுதித் திகதி (நீடிக்கப்பட்டது)2026 நவம்பர் 12
எழுத்துமூலப் பரீட்சை2026 டிசெம்பர் (கொழும்பு)

கல்வித் தகைமைகள்

சேவை பிரமாணக் குறிப்பின் 7.2.1.1.1 பிரிவின் கீழ் பின்வரும் (அ) அல்லது (ஆ) தகைமைகளில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

(அ) பிரிவு - பின்வருவனவற்றில் ஒன்று
  • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்ட, கணக்கியல் அல்லது கணக்காய்வைப் பிரதான பாடமாகக் கொண்ட கணக்கியல் / வணிகம் / வியாபாரம் / வர்த்தக அல்லது அரச முகாமைத்துவப் பட்டம்.
  • இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் தகுதிச்சான்று II / இடைநிலைப் பரீட்சை, கணக்கியல் மற்றும் வியாபார சான்றிதழ் II, வியாபார மட்டம் II அல்லது அதற்கு உயர்ந்த மட்டப் பரீட்சையில் சித்தி.
  • இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர் நிறுவகத்தின் முகாமைத்துவ மட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பரீட்சையில் சித்தி.
  • இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரி / உயர் தொழில்நுட்ப நிறுவனம் / உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தில் கணக்கியல் அல்லது வணிகம் தொடர்பான உயர் டிப்ளோமா, அல்லது தேசிய உயர் முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறி.
(ஆ) பிரிவு
  • வரி விதித்தல், தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம், கணினி இயந்திரவியல் விஞ்ஞானம், கணினித் தொழில்நுட்பம் போன்ற பட்டம்.
  • இப்பிரிவினர் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையில் அதிகபட்சம் 10% வரை மட்டுமே தெரிவு செய்யப்படுவர்.
ஏனைய தகைமைகள்
  • வயது: 22 - 35 (அரசாங்க சேவையில் உள்ளவர்கள் 45 வயதுக்கு மேற்படக் கூடாது).
  • இலங்கைப் பிரசையாக இருத்தல், நன்னடத்தை உடையவராக இருத்தல், மத குருவாக இல்லாதிருத்தல்.
  • நேர்முகப் பரீட்சையின் போது தகைமைகளுக்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் அவசியம். பெறுபேறுகளை எதிர்பார்த்து விண்ணப்பிக்க முடியாது.

சம்பளமும் சேவை நிபந்தனைகளும்

சம்பள அளவுத் திட்டம் (AS 01-2025): ரூ. 64,610 - 10 x 1,190 - 11 x 1,360 - 15 x 1,670 - ரூ. 116,520 (பொது நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025). ஆரம்பச் சம்பளப்படிநிலை ரூ. 64,610.
  • நிரந்தரமானதும் ஓய்வூதியத்திற்குரியதும்; விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
  • 3 ஆண்டுகள் தகுதிகாண் காலம்; இதற்குள் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையில் சித்தியடைந்து, கடமைகள், வருகை, நடத்தை திருப்திகரமாக இருந்தால் பதவியில் உறுதிப்படுத்தப்படுவர்.
  • அரசகரும மொழியில் நிபுணத்துவம் பெற வேண்டும் (சுற்றறிக்கை 18/2020).
  • நாட்டின் எப்பாகத்திலும் பணியாற்றும் நிபந்தனைக்கு உட்படுவர்; உடல், உள ரீதியாகத் தகுதி இருத்தல் வேண்டும்.

பரீட்சைக் கட்டணம் - ரூ. 1,200

  • எந்தவொரு வங்கியினதும் கடனட்டை (Credit Card).
  • இணையப் பரிவர்த்தனை வசதியுடன் கூடிய எந்தவொரு வங்கியினதும் பற்று அட்டை (Debit Card).
  • இலங்கை வங்கியின் நிகழ்நிலை வங்கி முறை / Flex app.
  • இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையும்.
கட்டணத்தை விடக் குறைவாகவோ அதிகமாகவோ செலுத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். செலுத்திய கட்டணம் எக்காரணம் கொண்டும் மீளச் செலுத்தப்படவோ வேறு பரீட்சைக்கு மாற்றப்படவோ மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பம் நிகழ்நிலையில் (Online), ஆங்கில மொழியில் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்; அதற்கு முன் வழிமுறைகளைப் பதிவிறக்கி வாசிக்கவும்.
  • விண்ணப்பம் ஏற்கப்பட்டதா / நிராகரிக்கப்பட்டதா என்பது SMS அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
  • (அ) அல்லது (ஆ) பிரிவில் எதன் கீழ் விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்; பின்னர் மாற்ற முடியாது.
  • முழுமையற்ற விண்ணப்பங்கள் முன்னறிவிப்பின்றி நிராகரிக்கப்படும்; தகவல்களின் உண்மைத்தன்மைக்கு விண்ணப்பதாரியே பொறுப்பு.
  • அரச ஊழியர்கள் விண்ணப்பத்தின் ஒரு நகலை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்; நேர்முகப் பரீட்சையின் போது சான்றளிக்கப்பட்ட நகலும் பணி உறுதிப்படுத்தல் கடிதமும் தேவை.
  • அனுமதி அட்டை நிகழ்நிலையிலேயே வழங்கப்படும். கிடைக்காவிடின் பரீட்சைகள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்புக் கிளையைத் தொடர்பு கொள்ளவும்.

பரீட்சை முறை

#விடயம்காலம்புள்ளிகள்
1பொது அறிவு (பொது நுண்ணறிவு)1 1/2 மணி100
2ஆக்கத்திறன், பகுப்பாயும் தன்மை, தொடர்பாடல் திறன்3 மணி100
3நிதிக் கணக்கியல்3 மணி100
4கணக்காய்வு3 மணி100
5தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு2 மணி100
6தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகாமைத்துவத்திற்கான உளச்சார்பு2 மணி100
  • (அ) பிரிவினர்: நிதிக் கணக்கியல் / கணக்காய்வில் ஒரு பாடமும், பொது நுண்ணறிவு வினாப்பத்திரமும் உள்ளடங்கலாக 03 வினாப்பத்திரங்களுக்குத் தோற்ற வேண்டும். (ஆ) பிரிவினரும் பொது நுண்ணறிவு வினாப்பத்திரம் உள்ளடங்கலாக 03 வினாப்பத்திரங்களுக்குத் தோற்ற வேண்டும். சரியான தெரிவுகளை அதிகாரபூர்வ அறிவிப்பில் உறுதிசெய்து கொள்ளவும்.
  • ஒவ்வொரு வினாப்பத்திரத்திலும் குறைந்தபட்சம் 40% புள்ளிகளும், மொத்தமாக குறைந்தபட்சம் 50% சராசரியும் பெற்றவர்கள் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.
  • நேர்முகப் பரீட்சைக்குப் புள்ளிகள் வழங்கப்படாது; கல்வித் தகைமை மற்றும் சேவை அறிக்கைகளைச் சரிபார்க்கவே நடத்தப்படும்.
  • தெரிவு: எழுத்துமூலப் பரீட்சையின் 03 வினாத்தாள்களிலும் பெற்ற மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் நடைபெறும். ஒரே புள்ளிகளாயின் இறுதித் தீர்மானம் ஆணைக்குழுவினுடையது.
  • பரீட்சை சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் நடத்தப்படும்; அனைத்து வினாத்தாள்களுக்கும் ஒரே மொழியில் விடையளிக்க வேண்டும்.

பாடப் பரப்பு (சுருக்கம்)

1. பொது நுண்ணறிவு (1 1/2 மணி - 100)

எண்கள், மொழி, வடிவங்கள், பரஸ்பரத் தொடர்புகள் தொடர்பான பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து, வாதம் செய்து, முடிவெடுக்கும் நுண்ணறிவு மட்டம் மதிப்பிடப்படும். பல்தேர்வு, சுருக்கமான, கட்டமைக்கப்பட்ட கட்டுரை வினாக்கள் இடம்பெறும்.

2. ஆக்கத்திறன், பகுப்பாய்வு, தொடர்பாடல் (3 மணி - 100)

தரப்படும் தலைப்புகளிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்து யோசனைகளைப் பகுப்பாய்வு செய்தல், தொகுத்தல், முன்னளித்தல்; சிக்கலான பந்தி / ஆவணத்தைப் புரிந்து அதன் பிரதான கருத்தைச் சொந்தச் சொற்களில் தெளிவாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்துதல்.

3. நிதிக் கணக்கியல் (3 மணி - 100)
  • நிதி அறிக்கையிடலுக்கான கட்டமைக்கப்பட்ட சட்டகம்.
  • 2007 இன் 07 ஆம் இலக்கக் கம்பனிகள் சட்டம் மற்றும் 1995 இன் 15 ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டு, கணக்காய்வுச் சட்டத்தின் தேவைகள்.
  • இலங்கைக் கணக்கியல் நியமங்கள்.
  • வரையறுக்கப்பட்ட கம்பனிகளுக்கான நிதிக் கூற்றுகள், காசுப் பாய்ச்சற் கூற்று.
  • நிதிக் கூற்றுகளின் பகுப்பாய்வு (விகிதங்கள்), முகாமைத்துவத்திற்கான சுருக்க அறிக்கை.
  • ஒன்றிணைந்த நிதிக் கூற்றுகள் (செம்மையாக்கல்களுடன்).
4. கணக்காய்வு (3 மணி - 100)
  • வியாபாரச் சூழல், நல்லாளுகை, இடரும் இணக்கப்பாடும்.
  • வியாபார நடைமுறைகளும் உள்ளகக் கட்டுப்பாடும்.
  • சான்றுப்படுத்தலுக்கான பொறுப்பும் மற்றைய சேவைகளும்.
  • கணக்காய்வுச் செயன்முறை, கணக்காய்வுச் சான்றுகள், கணக்காய்வு அறிக்கை.
  • கணக்காய்வில் ஒழுக்க நெறிமுறைகளின் தேவைப்பாடு.
  • கணக்காய்வின் தரங்கள் (இவ்வினாத்தாளில் கட்டுரை ரீதியான வினாக்களே இருக்கும்).
5 மற்றும் 6. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (தலா 2 மணி - 100)

அறிவு: தகவல் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்கும் திறன், திட்ட முகாமைத்துவத் திறன், கணினி முறைமைப் பகுப்பாய்வு, திட்டமிடலும் மென்பொருள் உருவாக்கமும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.

உளச்சார்பு: தகவல் தொழில்நுட்பப் போக்குகளுடனான மென்பொருள் உருவாக்கம், தாபித்துப் பேணும் செயற்பாடுகள் பற்றிய அறிவைப் பயன்படுத்தி முகாமைத்துவ உளச்சார்பை மதிப்பிடுதல்.

பரீட்சை மண்டபத்தில் கவனிக்க

  • அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது இலங்கைச் சாரதி அனுமதிப்பத்திரம் வேண்டும்; முகத்தையும் இரு காதுகளையும் மூடாமல் இருக்க வேண்டும்.
  • முதல் நாளன்றே கையொப்பமிட்ட அனுமதி அட்டையைப் பரீட்சை மேற்பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தெரிந்தே பொய்யான தகவல் வழங்கினால் அல்லது உண்மையை மறைத்தால், அரச பணியிலிருந்து நீக்கப்படலாம்.
  • பெறுபேறுகள் தபால் மூலம் அல்லது www.results.exams.gov.lk இல் அறிவிக்கப்படும்.
  • சிங்கள, தமிழ், ஆங்கில அறிவித்தல்களிடையே முரண்பாடு ஏற்பட்டால் சிங்கள அறிவித்தலே மேலோங்கும்.
செயலாளர், கணக்காய்வு சேவை ஆணைக்குழு, இல. 415, கோட்டே வீதி, இராஜகிரிய. (2026.09.11)
மேலதிக விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவித்தலைப் பார்வையிடவும்.

பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்

WhatsApp Channel இல் இணைய

Post a Comment

Previous Post Next Post