ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
வெற்றிடங்கள் - 2026
தாதி உத்தியோகத்தர் | பண்ணை மேற்பார்வையாளர் | முகாமைத்துவ உதவியாளர் (சிறாப்பர்)
விண்ணப்ப முடிவுத் திகதி (கிடைக்க வேண்டிய இறுதித் திகதி)
2026 ஒக்டோபர் 19
வெற்றிடங்கள் - சுருக்கம்
| # | பதவி | சம்பள அளவு | வயது |
|---|---|---|---|
| 01 | தாதி உத்தியோகத்தர் (தரம் II) | U-MTI(III) ரூபா 51,095 - 60,575 | 45 இற்கு மேற்படாமல் |
| 02 | பண்ணை மேற்பார்வையாளர் (தரம் III) | UMT 1 (III) ரூபா 51,095 - 60,575 | 45 இற்கு மேற்படாமல் |
| 03 | முகாமைத்துவ உதவியாளர் (தரம் III) (சிறாப்பர்) | U-MN1 (III) ரூபா 49,475 - 58,655 | 18 - 30 |
பதவிகளுக்கான தகைமைகள்
01தாதி உத்தியோகத்தர் - தரம் II
Nursing Officer
கல்வித் தகைமைகள்
- க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் 03 திறமைச் சித்திகள் சகிதம் 06 பாடங்களில் சித்தி.
- இலங்கை மருத்துவ பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட தாதியாக இணைக்கச் சான்றிதழ்.
தெரிவு செய்தல்
- பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம்
சம்பள அளவு: U-MTI(III) - ரூபா 51,095 - 7X540 - 10X640 - 60,575 மாதாந்தம்
வயது: 45 வயதிற்கு மேற்படாதிருக்க வேண்டும்
02பண்ணை மேற்பார்வையாளர் - தரம் III
Farm Supervisor
கல்வித் தகைமைகள்
- க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி அல்லது இலக்கியம் மற்றும் எண் கணிதம் / வர்த்தக எண் கணிதம் / கணிதம் போன்ற பாடங்களில் திறமைச் சித்தி சகிதம் 06 பாடங்களில் சித்தி.
- செயல்முறைப் பண்ணை பாடசாலை சான்றிதழ் அல்லது அதற்குச் சமமானது அத்துடன் அவ்வாறான சான்றிதழைப் பெற்றுக்கொண்டதன் பின் அரச அமைப்பொன்றில் பத்து (10) வருடகால அனுபவம்.
- விவசாய பாடசாலையின் டிப்ளோமா (பேராதனை அல்லது குண்டசாலை) அல்லது அதற்குச் சமமானது அத்துடன் அவ்வாறான சான்றிதழைப் பெற்றுக்கொண்டதன் பின் ஐந்து (05) வருடகால அனுபவம்.
தெரிவு செய்தல்
- நேர்முகத் தேர்வின் மூலம்
சம்பள அளவு: UMT 1 (III) - ரூபா 51,095 - 7x540 ; 10x640 - 60,575 மாதாந்தம்
வயது: 45 வயதிற்கு மேற்படாதிருக்க வேண்டும்
03முகாமைத்துவ உதவியாளர் - தரம் III (சிறாப்பர்)
Management Assistant (Shroff)
கல்வித் தகைமைகள்
- க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் ஒரே அமர்வில் பின்வருவனவற்றில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்:
i. சிங்கள மொழி / தமிழ் மொழி
ii. ஆங்கில மொழி / ஆங்கில இலக்கியம்
iii. கணிதம் - க.பொ.த (உயர் தர) பரீட்சையில் ஒரே அமர்வில் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்திருக்க வேண்டும் அத்துடன் அதில் ஒன்று கணக்கியல் பாடமாக இருக்க வேண்டும்.
முன்னுரிமை வழங்கப்படுபவர்கள்
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெற்றுக்கொண்ட ஆறு (06) மாத காலத்திற்குக் குறையாத கணனித் தகைமைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகைமை.
- கணனிப் பிரயோகப் பொதிகளைப் பயன்படுத்துவதில் இரண்டு (02) வருடகால அனுபவம்.
குறிப்பு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு / உயர் கல்வி நிறுவனத்தினால் தீர்மானிக்கப்படும் பிணை வைப்பொன்றைச் செலுத்த வேண்டும்.
தெரிவு செய்தல்
- எழுத்துமூலப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம்
சம்பள அளவு: U-MN1 (III) - ரூபா 49,475 - 17x540 - 58,655 மாதாந்தம்
வயது: 18 வயதிற்குக் குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்
ஏனைய நிபந்தனைகள்
- சகல விண்ணப்பதாரர்களும் இலங்கைப் பிரஜைகளாக இருக்க வேண்டும்.
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட படிவங்களுடன் தொடர்புடைய சான்றிதழ்களின் பிரதிகள், முழுமையான சுய தரவுடன் பதிவுத் தபாலில், 2026 ஒக்டோபர் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் தொடர்புடைய தகவல்களை பல்கலைக்கழக இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறான விண்ணப்பங்களை வெவ்வேறு உறைகளில் இட்டுச் சமர்ப்பிக்க வேண்டும். கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைத் தயவுசெய்து குறிப்பிடவும்.
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிகள் சபையில் சேவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை இயைபுடைய நிறுவனத்தின் தலைமையின் ஊடாக அனுப்ப வேண்டும். மேலதிக பிரதியொன்றை நேரடியாக அனுப்பலாம். இயைபுடைய திணைக்களத்தின் தலைமையின் ஊடாக அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- அரசாங்கத் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிகள் சபையில் சேவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதெல்லை ஏற்படுத்தல்ல.
- முழுமையற்ற விண்ணப்பங்கள், ஆதார ஆவணங்கள் அற்ற விண்ணப்பங்கள் மற்றும் முடிவுறுத்தல் திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது. அபேட்சகர்களைக் குறும் பட்டியலிடுவதற்கும் மற்றும் அவ்வாறான அபேட்சகர்களை மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைப்பதற்குமான உரிமையைப் பல்கலைக்கழகம் தன்னகத்தே கொண்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
சிரேஷ்ட உதவிப் பதிவாளர் (கல்விசாரா),
மனிதவளப் பிரிவு,
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்,
பசறை வீதி, பதுளை.
தொலைபேசி: 055 222 6441
மனிதவளப் பிரிவு,
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்,
பசறை வீதி, பதுளை.
தொலைபேசி: 055 222 6441
பதில் பதிவாளர்,
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்.
2026-09-20
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்.
2026-09-20
பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்
WhatsApp Channel இல் இணையுங்கள்
Tags
Vacancy
