N E W S

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் – 2026

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் – 2026

விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துகொண்டு, தொழில்வாய்ப்பு கருதி வெளிநாடு சென்ற / சென்று நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. தகுதியுடைய மாணவர்கள் www.slbfe.lk என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி திகதி : 2026.11.20 ஒரு பிரிவுக்கு ஒரு முறை மாத்திரமே ஒரு குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கப்படும்
அ) 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில்

தகைமைகள்

  • விண்ணப்பதாரியின் தாய் / தந்தை 2020.08.10 முதல் 2025.08.10 வரையிலான காலப்பகுதியில் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் புரிந்திருத்தல் வேண்டும்.
  • 2025 ஆம் ஆண்டு 5 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் மாணவர் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள் (Upload)

  • விண்ணப்பதாரியின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் நகல்
  • கல்வி அமைச்சு வெளியிட்ட, தரம் 5 பரீட்சையில் பெறுபேற்று அட்டையின் நகல்
  • புலம்பெயர் தாய் / தந்தையின் கடவுச்சீட்டு பக்கத்தின் நகல்
ஆ) க.பொ.த – சாதாரண தரம் (சா/தர) புலமைப்பரிசில்

தகைமைகள்

  • விண்ணப்பதாரியின் தாய் / தந்தை 2020.03.17 முதல் 2025.03.17 வரையிலான காலப்பகுதியில் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் புரிந்திருத்தல் வேண்டும்.
  • 2024 (2025) க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம் உள்பட குறைந்தபட்சம் 06 பாடங்களில் சித்தி, அதில் 03 பாடங்களில் A சித்தியுடன் திறமை பெற்றிருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள் (Upload)

  • விண்ணப்பதாரியின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் நகல்
  • கல்வி அமைச்சு வெளியிட்ட க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேற்று சான்றிதழின் நகல்
  • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை
  • புலம்பெயர் தாய் / தந்தையின் கடவுச்சீட்டு பக்கத்தின் நகல்
இ) க.பொ.த – உயர் தரம் (உ/தர) புலமைப்பரிசில்

தகைமைகள்

  • விண்ணப்பதாரியின் தாய் / தந்தை 2019.11.25 முதல் 2024.11.25 வரையிலான காலப்பகுதியில் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் புரிந்திருத்தல் வேண்டும்.
  • 2024 ஆம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்து, தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அரச அல்லது தனியார் பல்கலைக்கழகமொன்றில் / க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்து தேசிய தொழில்நுட்பக் கல்லூரி அல்லது பிற கல்வி நிறுவனங்களில் இணைந்து மேலதிக கல்வி பயிலுதல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள் (Upload)

  • விண்ணப்பதாரியின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் நகல்
  • கல்வி அமைச்சு வெளியிட்ட க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்று சான்றிதழின் நகல்
  • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை
  • குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தால் மாணவர் தகுதியை உறுதிப்படுத்திய கடிதத்தின் நகல்
  • புலம்பெயர் தாய் / தந்தையின் கடவுச்சீட்டு பக்கத்தின் நகல்
முக்கிய குறிப்பு: பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் மூல பிரதி மற்றும் கல்வி அமைச்சு வெளியிட்ட பரீட்சை பெறுபேற்று அட்டையின் மூல பிரதி என்பவற்றை பிள்ளை கல்வி பயிலும் பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவான் ஒருவர் மூலம் சான்றுப்படுத்தி மேற்குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புவதுடன், பதிவேற்றம் செய்யும்போது பெறப்படும் தொடர் இலக்கத்தை (Reference Number) ஆவணத்தின் வலது பக்க மேல் மூலையில் குறிப்பிடுமாறு தயவாய் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மிக முக்கியமானவை

  • மேற்குறிப்பிட்ட ஆவணங்களை முகாமையாளர் (நலன்புரி) பிரிவுக்கு சமர்ப்பிப்பது கட்டாயமாவதுடன், அவ்வாறு சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக கருதி நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பப் படிவம் ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி : 2026.11.20
  • ஒரு பிரிவுக்கு ஒரு முறை மாத்திரமே உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலதிக தகவல்களுக்கு : 011 236 5471 / 1989  |  இணையதளம்: www.slbfe.lk

Post a Comment

Previous Post Next Post