சுற்றுச்சூழல் அமைச்சு
'சொபா சலன' குறு வீடியோ மற்றும் 'சொபா சேயா' சுற்றுச்சூழல் புகைப்படப் போட்டி – 2026
📸 கெமரா வழியாக காணும் இயற்கையின் கதை
படைப்புகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள்
10.10.2026
வெற்றியாளர்களுக்கான பரிசுகள்
நினைவுச் சின்னங்கள்
சான்றிதழ்கள்
பணப் பரிசுகள்
🎥 சொபா சலன (SOBA CHALANA) — குறு வீடியோ போட்டி
போட்டிப் பிரிவுகள்: பொதுப் பிரிவு மற்றும் பாடசாலைப் பிரிவு
போட்டி நிபந்தனைகள்:
- கால அளவு அதிகபட்சம் 2 நிமிடங்கள் ஆகும்.
- படைப்புகளின் உள்ளடக்கமானது சுற்றுச்சூழல் நிகழ்வுகள், காலநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் மாதசார் போன்ற துறைகளையும் உள்ளடக்கலாம்.
- புனைகதை (Fiction), ஆவணப்படம் (Documentary) மற்றும் அனிமேஷன் (Animation) வடிவங்களில் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம்.
- சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் படைப்புகளைச் சமர்ப்பிக்க முடியும். சிங்களம் அல்லது தமிழ் மொழியில் செய்யப்படும் படைப்புகளுக்கு ஆங்கில மொழியில் வசன வரிகள் (Subtitles) இடப்பட வேண்டும். (வசனங்கள் இல்லாத படைப்புகளுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.)
- படைப்புகளை மின்னஞ்சல் அல்லது குறுவட்டு (DVD) மூலம் அனுப்பி வைக்கவும்.
வீடியோ சமர்ப்பிக்க:
sobachalanashortvideos@gmail.com
இலவச ஒரு நாள் பயிற்சி
போட்டியாளர்களுக்காக, இத்துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் குறு வீடியோ தயாரிப்பு குறித்த ஒரு நாள் விருப்பினர்வுப் பயிற்சி இலவசமாக நடத்தப்படும். இதில் பங்கேற்பதை உறுதி செய்ய 08.14.2026ஆம் திகதிக்கு முன்னர் 011–2034175 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.
📸 சொபா சேயா (SOBA SEYA) — சுற்றுச்சூழல் புகைப்படப் போட்டி
போட்டிப் பிரிவு: பொதுப் பிரிவு
போட்டி நிபந்தனைகள்:
- அனைத்துப் புகைப்படங்களும் இலங்கைக்குள் மட்டுமே எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
- ஒரு நபர் சமர்ப்பிக்கக்கூடிய அதிகபட்ச புகைப்படங்களின் எண்ணிக்கை மூன்று (03) மட்டுமே.
- பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பிறந்த திகதி ஆகிய விபரங்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.
- வண்ணம் (Color) அல்லது கருப்பு–வெள்ளை (Black & White) வடிவத்தில் எடுக்கப்பட்ட, திருத்தப்படாத அசல் பிரதி (Unedited original copy) JPG அல்லது JPGS வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- புகைப்படங்கள் குறைந்தபட்சம் 2000 பிக்சல்கள் (Pixels) கொண்டதாக இருக்க வேண்டும்.
புகைப்படங்கள் சமர்ப்பிக்க:
sobaseyaphotography@gmail.com
மேலதிக விபரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி ஊக்குவிப்பு மற்றும் விசேட திட்டங்கள் பிரிவு
5–ஆவது மாடி, 'சொபாதம் பியஸ',
இல. 416/C/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை.
தொலைபேசி: 011 203 41 75
Tags
Competition


