அகரம் Logo
N E W S

மொறட்டுவைப் பல்கலைக்கழகம் - முகாமைத்துவ உதவியாளர் தரம் – III (களஞ்சியப் பராமரிப்பு) வேலைவாய்ப்பு - 2026

மொறட்டுவைப் பல்கலைக்கழகம் – இலங்கை

வெற்றிட அறிவித்தல் 2026

முகாமைத்துவ உதவியாளர் தரம் – III (களஞ்சியப் பராமரிப்பு)
விண்ணப்ப முடிவுத் திகதி
2026.08.31
ஆட்சேர்ப்பு முறை
எழுத்துமுலம் + நேர்முகம்
U–MN 1 (III)
ரூபா 49,475 – 17 × 540 – 58,655
(மாதாந்தம் • முகாமைத்துவ சேவை சுற்றறிக்கை 06/2025 மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை 02/2025(i) இற்கு அமைய)

● தேவையான தகைமைகள்

1. க.பொ.த. (சா.தர) பரீட்சையில் கீழ் குறிப்பிடப்பட்ட பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் ஒரே தடவையில் சித்தி பெற்றிருத்தல்:
  • சிங்கள மொழி / தமிழ் மொழி
  • ஆங்கில மொழி / ஆங்கில இலக்கியம்
  • கணிதம்
மற்றும்
2. க.பொ.த. (உ.தர) பரீட்சையில் ஒரே தடவையில் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றிருத்தல் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர).

முன்னுரிமை வழங்கப்படும் தகைமைகள்

a. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொண்ட 06 மாதங்களுக்குக் குறையாத கணினி பயன்பாடு தொடர்பில் அங்கீகரிக்க முடியுமான தகைமை
மற்றும்
b. கணினி பயன்பாடு தொடர்பில் இரண்டு (02) ஆண்டுகள் அனுபவம் இருத்தல்

பதவிக்குப் பிரத்தியேகமான தகைமை

மேற்குறிப்பிட்ட தகைமைகள் தவிர, விண்ணப்பதாரர் களஞ்சியப் பராமரிப்பு தொடர்பில் குறைந்தது ஓர் ஆண்டு (01) அனுபவம் ஒன்று, அல்லது க.பொ.த. (சா.தர) பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் சித்தி பெற்றிருத்தல், அல்லது க.பொ.த. (உ.தர) பரீட்சையில் கணக்கியல் பாடத்தில் சித்தி பெற்றிருத்தல் ஆகிய சிறப்புத் தகைமைகளில் ஒன்றை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

⚠ குறிப்பு: பல்கலைக்கழகத்தினால் தீர்மானிக்கப்படும் வகையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களினால் பாதுகாப்பு வைப்பு ஒன்றை வைப்புச் செய்தல் வேண்டும்.

● ஆட்சேர்ப்பு முறை

எழுத்துமுல பரீட்சை (புள்ளி 75%) மற்றும் நேர்முகப் பரீட்சை (புள்ளி 25%) மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

எழுத்துமுல பரீட்சையின் பாடங்கள்
சிங்களம் / தமிழ் மற்றும் ஆங்கில மொழி தொடர்பான அறிவு
நுண்ணறிவுச் சோதனை மற்றும் பொது அறிவு
கணினி அறிவு
களஞ்சியப் பராமரிப்பு தொடர்பான அறிவு

● வேறு தகைமைகள்

  • இலங்கை பிரசையாக இருத்தல் வேண்டும்
  • விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதியில் 18 வயதுக்குக் குறையாத மற்றும் 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்
  • சிறந்த பண்புடையவராக இருத்தல் வேண்டும்

★ அடிப்படைச் சம்பளம் தவிர வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது விண்ணப்பங்களை 2026.08.31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் uom.lk/vacancies என்ற இணையதளத்தின் ஊடாக ஒன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு பதவிக்குமான வன் பிரதி (Hard Copy) விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து, உறுதிப்படுத்தி, இணைப்புகளுடன் – உதவிப் பதிவாளர் / நிறுவன (கல்விசாரா) பிரிவு, மொறட்டுவைப் பல்கலைக்கழகம், மொறட்டுவை என்ற முகவரிக்கு 2026.08.31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தபாலில் அனுப்ப வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post