தேசிய நேர்மைப் பரிசுகள் - 2026
சின்ன வடிவமைப்புப் போட்டி
National Integrity Awards 2026 – Logo Design Competition
“ஒழுக்கக் கலாச்சாரம் - சுத்தமான இலங்கை”
அரச அதிகாரிகளின் நேர்மையை உறுதிசெய்து, லஞ்சம் மற்றும் ஊழலற்ற ஒரு பொது சேவையை உருவாக்கும் நோக்குடன், அரச நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள உள்நோக்குநிலைப் பிரிவுகளின் (Internal Affairs Units) செயற்பாட்டை மதிப்பீடு செய்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் “தேசிய நேர்மைப் பரிசுகள் 2026” அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பரிசுக்கான வலுவான காட்சி அடையாளத்தை உருவாக்கும் நோக்கில், அதிகாரப்பூர்வ சின்னம் (Logo) இலங்கை பிரஜைகளிடமிருந்து பெறப்படும் சமர்ப்பிப்புகளிலிருந்து தெரிவு செய்யப்படும்.
போட்டி விபரங்கள்
பங்குபற்றுபவர்கள்
இலங்கை பிரஜைகள்
சமர்ப்பிப்பு முறை
இணையவழி (Online)
- போட்டியின் நோக்கங்கள் மற்றும் பங்குபற்றுவதற்கான தகுதிகள்
- வடிவமைப்பு வழிகாட்டல்கள் (Design Guidelines)
- சமர்ப்பிப்பு முறைமை பற்றிய முழு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் / QR குறியீட்டு மூலம் பெறலாம்
பணப்பரிசு: Rs. 75,000.00
வெற்றி பெறும் வடிவமைப்பிற்கு பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்
Bureau for the Development of Integrity
Presidential Secretariat – ஜனாதிபதி காரியாலயம்
“ஒரு நேர்மைமிக்க தேசம் - ஒரு சுத்தமான இலங்கை” என்ற தேசிய நோக்கத்தை நோக்கி உங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குங்கள்.

