இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் தரம் III இற்கான 200 வெற்றிடங்களுக்காக நடைபெறவுள்ள திறந்த போட்டிப் பரீட்சைக்கு தகுதியுள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து நிகழ்நிலை (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
● வேலை விபரம்
சேவை / தரம்
இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவை - தரம் III
நியமன தன்மை
நிரந்தரமானது, ஓய்வூதிய உரிமையுடையது. 3 வருட தகுதிகாண் காலப்பகுதி.
● கல்வித் தகைமைகள் (எவையேனும் ஒன்று)
- ஒரே தவணையில் க.பொ.த (உயர்தர) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி (பொது அறிவு உட்பட)
- அல்லது இலங்கைப் பாராளுமன்றச் சட்டமொன்றின் மூலம் நிறுவப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றால் வழங்கப்படும் முதலாம் அல்லது இரண்டாம் வகுப்புச் சித்தியுடனான பட்டமொன்றைப் பெற்றிருத்தல்
● ஏனைய தகைமைகள்
வயது
22 - 35 வயது (பிறந்த திகதி 1991.08.31 அல்லது அதற்கு முன்னராகவும், 2004.08.31 அல்லது அதற்குப் பின்னராகவும் இருத்தல் வேண்டும்)
அரசாங்க/மாகாண சேவையில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயது 35 வருடங்கள்
பிரசாவுரிமை & நடத்தை
இலங்கைப் பிரசையாக இருத்தல்; சிறந்த நன்னடத்தையுடையவராக இருத்தல்
உடல்நலம்
நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சேவை செய்வதற்குத் தேவையான உடல் மற்றும் உள ஆரோக்கியம்
● எழுத்துப் பரீட்சை - பாடங்கள்
| பாடம் | புள்ளிகள் | சித்தியடைய குறைந்தது | காலம் |
|---|---|---|---|
| கிரகித்தல் | 100 | 40 | 1½ மணித்தியாலம் |
| நுண்ணறிவுப் பரீட்சை | 100 | 40 | 1 மணித்தியாலம் |
| பொது அறிவு | 100 | 40 | 1 மணித்தியாலம் |
அனைத்துப் பாடங்களிலும் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களில், கூட்டுத்தொகைப் புள்ளிகளின் அடிப்படையில் அதிகம் பெறுபவர்கள் சாதாரண நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதி பெறுவர். மேலும் இதற்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.
● பரீட்சை மொழிமூலம்
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடாத்தப்படும். விண்ணப்பதாரர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு மொழியில் தோற்ற முடியும் (அனைத்து வினாப்பத்திரங்களுக்கும் ஒரே மொழியில் மாத்திரம் விடையளிக்க வேண்டும்).
● சம்பள அளவுத் திட்டம்
சம்பள குறியீடு: SL-1-2025
மாதாந்த சம்பளம்: ரூபா 82,150.00 - 10 x 2,400 - 8 x 2,940 - 17 x 3,900 - 195,970.00
● பரீட்சைக் கட்டணம் மற்றும் செலுத்தும் முறை
கட்டணம்: ரூபா 1,200.00 (நிகழ்நிலை Online முறையில் மாத்திரம்)
- எந்தவொரு வங்கியினதும் கடன் அட்டை மூலம்
- இணையவழி கொடுப்பனவு வசதியுடன் எந்தவொரு வங்கியின் வரவு அட்டை மூலம்
- இலங்கை வங்கியின் நிகழ்நிலை வங்கி முறைமை / Flex Online Banking மூலம்
- இலங்கை வங்கியின் ஏதேனும் ஒரு கிளை மூலம்
முக்கிய திகதிகள்
● விண்ணப்பிப்பது எவ்வாறு?
விண்ணப்பப்படிவம் இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தில் "Our Services" ➤ "Online Applications - (Recruitment/ E.B. Exams)" எனும் பகுதியின் கீழ் கிடைக்கும். நிகழ்நிலை மூலமான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
செயலாளர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, கொழும்பு - 01.
