அகரம் Logo
N E W S

1990 சுவ செரிய மன்றம் - இலவச ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் - 2026

📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026

இலங்கையின் "முன் மருத்துவமனை பராமரிப்பு" சேவையின் பெருமைக்குரிய ஒரு உறுப்பினராகுங்கள்!

"1990 சுவ சேரிய மன்றம்" என்பது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் செயல்படும், இலங்கையின் முன்னோடியான முன்-மருத்துவமனை பராமரிப்பு மற்றும் அவசர ஆம்புலன்ஸ் சேவையாகும். "1990 சுவ சேரிய மன்றம்" நாடு முழுவதும் 322 ஆம்புலன்ஸ்களுடன் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

நாடு முழுவதும் உயிர்களைக் காப்பாற்ற அர்ப்பணிக்கப்பட்ட அவசர மற்றும் முன்-மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவையை வழங்கும் இந்த நிறுவனத்தில், அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ சேவை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குத் தகுதியும் திறமையும் கொண்ட, உற்சாகமிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் (EMT) — ஆண் / பெண்
தகுதிகள்
  • 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • க.பொ.த உயர்தர (A/L) தேர்வில் ஏதேனும் பிரிவில் மூன்று (03) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் (உயிரியல் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்) அல்லது சுகாதாரத்துடன் தொடர்புடைய துறையில் NVQ நிலை 4 தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
  • க.பொ.த சாதாரண தர (O/L) தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தது "S" தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • அடிப்படை தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் மேலதிக மொழித் திறன் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
  • அவசர மருத்துவ சேவைகள் (EMS) தொடர்பான முன் அனுபவம் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
  • குறைந்தபட்ச உயரம்: ஆண் – 5 அடி 4 அங்குலம் | பெண் – 5 அடி 2 அங்குலம்
  • உடல் நிறை குறியீடு (BMI): 18.5 – 27
  • பார்வைத் திறன்: 20/20 முதல் 20/30 வரை
குறிப்பு: அனைத்து விண்ணப்பதாரர்களும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுதல் கட்டாயமாகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், 1990 சுவ சேரிய மன்றம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் டிப்ளோமா பாடநெறியில் பயிற்சி பெற வேண்டும். பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் மூன்று (03) ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் சேவையாற்ற வேண்டும்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் (Pilot)
தகுதிகள்
  • 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • க.பொ.த சாதாரண தர (O/L) தேர்வில் ஆறு (06) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் குறைந்தபட்சம் இரண்டு வருட சேவை அனுபவத்தினை பெற்றிருத்தல் வேண்டும்.
  • சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறந்த தொடர்பாடல் திறன் கொண்டிருத்தல் வேண்டும்.
  • ஆங்கில மொழித் திறன் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
  • குறைந்தபட்ச உயரம்: 5 அடி 4 அங்குலம்
  • உடல் நிறை குறியீடு (BMI): 18.5 – 27
  • பார்வைத் திறன்: 20/20 முதல் 20/30 வரை
குறிப்பு: அனைத்து விண்ணப்பதாரர்களும் திறன் தேர்வில் (Aptitude Test) கட்டாயமாகத் தேர்ச்சி பெற வேண்டும்.
அவசர மருத்துவ சேவை ஒருங்கிணைப்பாளர் (Emergency Medical Dispatcher – EMD)
தகுதிகள்
  • 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • க.பொ.த உயர்தர (A/L) தேர்வில் எந்தவொரு பிரிவிலும் மூன்று (03) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறந்த தொடர்பாடல் திறன் கொண்டிருத்தல் வேண்டும்.
  • ஆங்கில மொழித் திறன் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) அறிவு கூடுதல் தகுதியாக கருதப்படும்.
குறிப்பு: அனைத்து விண்ணப்பதாரர்களும் திறன் தேர்வில் (Aptitude Test) கட்டாயமாகத் தேர்ச்சி பெற வேண்டும்.

📩 விண்ணப்பிக்கும் முறை

📄 விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய

ஆவலுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை careers@1990.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம், அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலின் மூலம் அனுப்பலாம்:
1990 சுவ சேரிய மன்றம், இல. 43, ஹோரட்டன் பிளேஸ், கொழும்பு – 07

மின்னஞ்சல் மூலம் அனுப்பும்போது, மின்னஞ்சலின் பொருள் வரியில் (Subject Line) விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்களில், உறையின் மேற்பகுதியில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டிய இறுதி தேதி:
2026.07.27

Post a Comment

Previous Post Next Post