அகரம் Logo
N E W S

இலங்கை தேசிய ஆராய்ச்சி சபையில் வேலைவாய்ப்புகள் - 2026

இலங்கை தேசிய ஆராய்ச்சி சபை

National Research Council of Sri Lanka

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

வெற்றிடங்கள்

இலங்கை தேசிய ஆராய்ச்சி சபையானது நிதி உதவித் திட்டங்கள் ஊடாக அரச துறை விஞ்ஞானிகள் மூலம் உக்குவிப்பு மற்றும் உதவி ஆய்வுகளுக்காக 2016 இன் 11ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சட்டரீதியான நிறுவனம் ஒன்றாகும். தேசிய ஆராய்ச்சி சபையின் பின்வரும் பதவிகளுக்காக தகுதி பெற்ற இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உதவிப் பணிப்பாளர் (விஞ்ஞான அலுவலகள் ஒருங்கிணைப்பு) — பதவி 01
வேலை விபரம்: விஞ்ஞான மற்றும் முயோகவைய முகாமைத்துவத்திற்குப் பொருபாக இருந்து நிதியுதவித் திட்டங்கள், ஆராய்ச்சி நிகழ்ச்சிகள், நிர்வாகம், அறிக்கையிடல், பங்குதாரர் ஒருங்கிணைப்பு, கொள்கை அமுலாக்கம், கண்காணிப்பு நடவடிக்கைகள், தரவுத்தள முகாமைத்துவம், திட்டமிடல், நிறுவன அபிவிருத்தி மற்றும் நிறுவனத்தால் ஒப்படைக்கப்படும் ஏனைய கடமைகளை மேற்பார்வையிட்டு நிர்வகித்தல்.

தகைமைகள் (வெளிநாராரிக்கு):
  1. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானத் துறையில் இளமானிப் பட்டம்
    மற்றும்
    அரச நிறுவனம் அல்லது சபை அல்லது புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றில் முதல் பட்டத்தைப் பெற்ற பின் தொடர்புடைய துறையில் குறைந்தது மூன்று (03) ஆண்டுகள் தகைமைக்குப் பின்னரான அனுபவம்.
வயது: 22 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (உள் விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயதெல்லை பொருந்தாது)
மாதச் சம்பளம்MM 1-1 – 2025 (அடிப்படைச் சம்பளம் + வாழ்க்கைச் செலவு) — ரூபா 81,710 + 17,800 = ரூபா 99,510
விஞ்ஞான / ஆராய்ச்சி அதிகாரி — பதவி 01
வேலை விபரம்: நிதியுதவித் திட்டங்களின் முகாமைத்துவத்திற்குப் பொருபாக இருந்து, நிதியுதவி தொடர்பான தகவல்களை வெளியிடுதல், தரவுத்தளங்களைப் பராமரித்தல், புள்ளிவிபரப் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் அறிக்கைத் தயாரித்தல், மேலும் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் போன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.

தகைமைகள்:
  1. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல், விவசாயம், பொருதியியல், ICT கணினி விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், கணினி பொறியியல் அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய துறையில் சிறப்புப் பட்டம்
    அல்லது
    மேற்குறிப்பிட்ட துறைகளில் பொதுப் பட்டமும், அத்துடன் தொடர்புடைய துறையில் பட்டத்திற்குப் பின்னரான டிப்ளோமா.
வயது: 22 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (உள் விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயதெல்லை பொருந்தாது)
மாதச் சம்பளம்AR 1-2025 (அடிப்படைச் சம்பளம் + வாழ்க்கைச் செலவு) — ரூபா 81,675 + 17,800 = ரூபா 99,410
முகாமைத்துவ உதவியாளர் — பதவி 04
வேலை விபரம்: கடதாசி பரிமாற்றங்கள், கொடுப்பனவுகள், கணக்கியல் பதிவுகள், கொள்வனவு நடவடிக்கைகள், நிதியுதவி நிர்வாகம், திட்ட அறிக்கையிடல், தருவத்தாள் பராமரிப்பு, பங்குதாரர்களுடனான தொடர்பாடல் மற்றும் அலுவலக செயற்பாடுகள் ஆகியவற்றை நிர்வகித்தல்.

தகைமைகள் (வெளிநாராரிக்கு):
  1. க.பொ.த. (சா/த) பரீட்சையில் பின்வரும் நான்கு பாடங்களுக்காக திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்:
    • சிங்களம்/தமிழ்
    • ஆங்கில மொழி (பதவிக்கு தேவையெனில்)
    • கணிதம்
  2. மற்றவை: க.பொ.த. (உ/த) பரீட்சையில் (பொதுப் பரீட்சை தவிர்) மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருத்தல். மேலதிக தகுதிகள்: கணினி பயன்பாடுகள், சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில தட்டச்சில் தேர்ச்சி மற்றும் பதவிக்கு பிரத்தியேகமான தகைமைகள் மேலதிக அனுகூலங்களாகும்.
உள்ளக விண்ணப்பதாரர்களுக்கு: மேலூள்ள பணியாளர் பிரிவின் கீழ் நிரந்தர பதவி ஒன்றில் குறைந்தது ஐந்து (05) ஆண்டுகள் திருப்திகரமான சேவையை பூர்த்தி செய்திருத்தல்.

வயது: 18 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (உள் விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயதெல்லை பொருந்தாது)
மாதச் சம்பளம்MA 1-1 – 2025 (அடிப்படைச் சம்பளம் + வாழ்க்கைச் செலவு) — ரூபா 43,312 + 17,800 = ரூபா 61,112
ஓட்டுநர் — பதவி 02
வேலை விபரம்: நிறுவனத்தின் வாகனங்களை நடைமுறையிலுள்ள விதிமுறைகளுக்கு இணங்க இயக்கி, பணிகள், போக்குவரத்து, ஆவணங்கள் மற்றும் பொதிகள் ஆகியவற்றின் பாதுகாப்பான மற்றும் திறமையான போக்குவரத்தை உறுதிப்படுத்துதல். வாகனப் பதிவுகளைப் பராமரித்தல் மற்றும் வாகனங்களின் நிலையைக் கண்காணித்தல்.

தகைமைகள் (வெளிநாராரிக்கு):
  1. க.பொ.த. (சா/த) பரீட்சையில் அதிகபட்சம் இரண்டு அமர்வுகளில் குறைந்தது இரு (02) திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.
    மற்றும்
    கனரக வாகனங்களை செலுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருத்தல் மற்றும் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் பெற்ற பின்னர் குறைந்தது மூன்று (03) ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
உள்ளக விண்ணப்பதாரர்களுக்கு: மேற்குறிப்பிட்ட தகைமைகளுடன், NRC இல் குறைந்தது ஐந்து (05) ஆண்டுகள் திருப்திகரமான சேவையை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

வயது: 18 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (உள் விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயதெல்லை பொருந்தாது)
மாதச் சம்பளம்PL 3 - 2025 (அடிப்படைச் சம்பளம் + வாழ்க்கைச் செலவு) — ரூபா 40,834 + 17,800 = ரூபா 58,638
அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும் ஏனைய நிபந்தனைகள்
  1. விண்ணப்பதாரர்கள் இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  2. விண்ணப்பதாரர்கள் பதவியின் கடமைகளை மேற்கொள்வதற்கு உடல் தகைமையை பெற்றிருத்தல் வேண்டும் என்பதோடு நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் பணியாற்ற தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
  3. விண்ணப்பதாரர்கள் சிறந்த நடத்தையுடையவராக இருத்தல் வேண்டும்.
  4. எழுத்து மூலமான தேர்வு மற்றும்/அல்லது கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை ஒன்றின் மூலம் ஆட்சேர்க்கப்படும்.
  5. ஓர் (02) ஆண்டு காலம் அல்லது துருப்பிரமாணத்தின்படி ஏற்றுவதற்குரிய முதலில் நியமிக்கப்பட்ட விண்ணப்பதாரர் தேசிய ஆராய்ச்சி சபையின் அங்கீகரிக்கப்பட்ட நியமன அமைச்சு. ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்காக (ETF) உரித்துடையது.
  6. விண்ணப்பதாரர்கள் தமது பிறப்புச் சான்றிதழ், ஏனைய தொடர்புடைய சான்றிதழ்கள், உறவினர் அல்லாத நபர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளுடன் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை, கடிதத் தலைப்பில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு 2026 ஜூலை 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் "தலைவர், தேசிய ஆராய்ச்சி சபை, 120/7, விந்திய மாவத்தை, கொழும்பு-07" என்ற முகவரிக்கு கிடைக்குமாறு பதிவுத் தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்புதல் வேண்டும்.
  7. அரச திணைக்களங்கள் / கூட்டுத்தாபனங்கள் / சட்டரீதியான சபைகளில் சேவையிலுள்ள விண்ணப்பதாரர்கள் தமது திணைக்கள தலைவர்கள் மூலம் அனுப்புதல் வேண்டும்.
  8. மேலூள்ள தேவைகளை பூர்த்தி செய்யாத அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பப் படிவம்
மேலதிக விபரங்களுக்கு www.nrc.gov.lk எனும் தேசிய ஆராய்ச்சி சபை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

📄 விண்ணப்பப் படிவம் (Application Form)
அனுப்ப வேண்டிய முகவரி

தலைவர்,
தேசிய ஆராய்ச்சி சபை,
120/7, விந்திய மாவத்தை,
கொழும்பு - 7.

இணையதளம்: www.nrc.gov.lk
தொ.பே: 011-2675176

Post a Comment

Previous Post Next Post