பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய அபிவிருத்தித் திட்டம் கட்டம் II — நிலை 2
துறைமுகம் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு — திட்ட முகாமைத்துவ பிரிவு
திட்டம் பற்றி
BIA அபிவிருத்தித் திட்டமானது விமான போக்குவரத்துத் தொழில்துறையின் அதிகரிக்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய வசதிகளை மாற்றியமைத்தல் மற்றும் விரிவுபடுத்தலை நோக்காகக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக் முகவர் நிறுவனத்தினால் (JICA) நிதியளிக்கப்பட்ட இத்திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அதிநவீன வசதிகளைக் கொண்ட புதிய முனையக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகள் உள்ளடங்கும்.
வெற்றிடங்கள் மற்றும் சம்பள விபரம்
| வ.இல | பதவி | எண்ணிக்கை | சம்பளம் (பிரிவு) |
|---|---|---|---|
| 1 | திட்டப் பணிப்பாளர் | 01 | பிரிவு A — ரூபா 400,000/- |
| 2 | திட்ட ஒப்பந்த நிபுணர் | 01 | பிரிவு C — ரூபா 305,000/- |
| 3 | சிவில் பொறியியலாளர் | 02 | — |
| 4 | மின் பொறியியலாளர் | 01 | — |
| 5 | மின்னணு பொறியியலாளர் | 01 | — |
| 6 | பொறிமுறை பொறியியலாளர் | 01 | பிரிவு D — ரூபா 260,000/- |
| 7 | திட்ட கணக்காளர் | 01 | — |
| 8 | திட்ட உள்ளக கணக் காய்வாளர் | 01 | பிரிவு D-1 — ரூபா 260,000/- |
| 9 | கணக்கு உதவியாளர் | 01 | பிரிவு F — ரூபா 160,000/- |
| 10 | சரக்கெடுத்து எழுது வினைஞர் | 03 | — |
| 11 | அலுவலக உதவியாளர் | 03 | — |
பதவி நிலைகளுக்கான தகைமைகள்
1. திட்டப் பணிப்பாளர் (பதவி 01)
பட்டமளிக்கும் மன்றத்தால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட தொடர்புடைய துறையில் இளமானிப் பட்டம் ஒன்று. மேலும், தொடர்புடைய துறையில் பட்டப்பின்படிப்பு பட்டம் (முதுமானி)/ தொழில்முறை அமைப்பில் இருந்து பெறப்பட்ட இணை அங்கத்துவம். முகாமைத்துவ மட்டத்தில் குறைந்தது 12 ஆண்டுகள் தகைமைக்குப் பின்னரான அனுபவம் (இதில் 06 ஆண்டுகள் சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்தில்).
2. திட்ட ஒப்பந்த நிபுணர் (பதவி 01)
சிவில் பொறியியல் துறையில் இளமானிப் பட்டம் ஒன்று மற்றும் தொடர்புடைய துறையில் பட்டப்பின்படிப்பு பட்டம்/ இணை அங்கத்துவம். முகாமைத்துவ மட்டத்தில் தொடர்புடைய துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம்.
3-6. பொறியியலாளர்கள் (சிவில்/மின்/மின்னணு/பொறிமுறை)
தொடர்புடைய துறையில் பட்டம் ஒன்றுக்கு இணையான தகைமை ஒன்றாக பட்டமளிக்கும் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இளமானிப் பட்டம். தொடர்புடைய துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை அமைப்பு ஒன்றில் இருந்து பெறப்பட்ட இணை அங்கத்துவம். தொடர்புடைய துறையில் குறைந்தது 07 ஆண்டுகள் அனுபவம்.
7. திட்ட கணக்காளர் (பதவி 01)
தொடர்புடைய துறையில் பட்டம் ஒன்றுக்கு இணையான தகைமை. உரிமதாரர் II இடைநிலை பரீட்சையில் சித்தி பெற்ற கணக்கியல் மற்றும் வர்த்தகத் தர பரீட்சை/ நிறுவன தர பரீட்சை. குறைந்தது 07 ஆண்டுகள் தகைமைக்குப் பின்னரான அனுபவம்.
8. திட்ட உள்ளக கணக்காய்வாளர் (பதவி 01)
அகில இலங்கை அரச சேவை ஒன்றின் வகுப்பு II/III அதிகாரி அல்லது தொடர்புடைய துறையில் இதனையொத்த அந்தஸ்த்து. வகுப்பு II/III பதவியில் குறைந்தது 07 ஆண்டுகள் அனுபவம்.
9. கணக்கு உதவியாளர் (பதவி 01)
தொடர்புடைய துறையில் பட்டம் ஒன்றுக்கு இணையான தகைமை அல்லது தொழில்நுட்பக் கல்வித் தகைமைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட NVQ தரம் 7க்கு குறையாத தேர்ச்சி சான்றிதழ். தேவையான சிறப்புத் துறையில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம்.
10. சரக்கெடுத்து எழுதுவினைஞர் (பதவிகள் 03)
க.பொ.த. (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிங்களம்/ தமிழ், ஆங்கில மொழிகள், கணிதம் மற்றும் மேலும் இரு பாடங்களில் திறமை சித்திகளுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
11. அலுவலக உதவியாளர் (பதவிகள் 03)
க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிங்களம்/ தமிழ், உட்பட குறைந்தது ஆறு பாடங்களில் திறமை சித்திகளுடன் இரு அமர்வுகளுக்குள் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி திகதி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்வி, தொழில்முறை தகைமை சான்றிதழ்களின் பிரதிகளுடன் 2026 ஓகஸ்ட் 12 ஆம் திகதிக்கு முன்னர், பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
செயலாளர்,
துறைமுகம் மற்றும் விமானசேவைகள் அமைச்சு,
இல. 19, சைத்ய வீதி, கொழும்பு 01.
