அகரம் Logo
N E W S

உயர்தரப் பரீட்சை (A/L) எழுதிய மாணவர்களுக்கான அரசாங்கத்தின் இலவச 50,000 ரூபாய் நிதியுதவித் திட்டம்!

🪙 அரசாங்க இலவச நிதியுதவித் திட்டம்

உயர்தரப் பரீட்சை (A/L) மாணவர்களுக்கான “நிபுணதா சவிய” உதவித்தொகை

நீங்கள் அண்மையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L) எழுதிவிட்டு அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைக்காதவர்கள் தொழில்சார் படிப்புகளைத் தொடர உதவும் “நிபுணதா சவிய” (Nipunatha Saviya) இலவச உதவித்தொகைத் திட்டத்தின் முழு விபரங்களும் கீழே.

✅ விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்

  • கல்வித் தகைமை: அண்மையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு (A/L) தோற்றியிருக்க வேண்டும் (சித்தி கட்டாயமில்லை).
  • பெற்றோரின் விபரம்: பெற்றோரில் ஒருவர் ETF (ஊழியர் நம்பிக்கை நிதியம்) கணக்கு உள்ளவராக இருக்க வேண்டும்.
  • வயது எல்லை: விண்ணப்பிக்கும் போது மாணவரின் வயது 23 வயதிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

 கிடைக்கும் நன்மைகள்

  • தொழிற்பயிற்சி படிப்பிற்காக ரூபாய் 50,000 வரை நிதியுதவி.
  • மீளச் செலுத்த தேவையில்லாத முழுமையான இலவச உதவித்தொகை.
  • நிதி நேரடியாகக் கல்வி நிறுவனத்திற்குச் செலுத்தப்படும்; ஏற்கனவே கட்டணம் செலுத்தியிருந்தால் ஆதாரங்களுடன் Reimbursement பெறலாம்.

 எங்கே, என்ன பாடநெறிகள்?

  • TVEC (தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டும்.
  • NVQ Level 3, 4 அல்லது 5 தகுதி மட்டங்களுக்கு உட்பட்ட படிப்புகள்.
  • IT, ஆடை வடிவமைப்பு, விவசாயம், மின்சாரம் & இலத்திரனியல் உள்ளிட்ட 100+ பாடத்திட்டங்களில் விருப்பமானதைத் தேர்வு செய்யலாம்.
⚠️ முக்கிய குறிப்பு: உங்கள் பெற்றோருக்கு ETF கணக்கு இருந்து, நீங்கள் அண்மையில் A/L எழுதியிருந்தால், உடனே கீழுள்ள இணையதளத்தில் "Nipunatha Saviya Benefit Scheme" பகுதிக்குச் சென்று மேலதிக விபரங்களைப் பெறலாம்.

இந்தப் பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் மாணவர் குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Post a Comment

Previous Post Next Post