இலங்கை பரீட்சைத் திணைக்களம்
க.பொ.த. (உ.தர) பரீட்சை — 2026
அனுமதி அட்டை திருத்தம் தொடர்பான அறிவிப்பு
க.பொ.த. (உ.தர)ப் பரீட்சை 2026 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
பரீட்சைக் காலம்
10.08.2026 – 05.09.2026
திருத்தங்களுக்கான இறுதி நாள்
03.08.2026, நள்ளிரவு 12.00 மணி
அனுமதி அட்டையில் திருத்தம் செய்வது எப்படி?
- பாடம், மொழிமூலம், பெயர் ஆகியவற்றில் திருத்தம் தேவைப்பட்டால், https://onlineexams.gov.lk/eic எனும் இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
- ஒரு திருத்தத்தை ஒரு தடவை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
- பரீட்சை நிலையங்களை மாற்றம் செய்ய முடியாது.
- தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமது அனுமதி அட்டைகளை 24.07.2026 முதல் மேற்படி இணையதளத்தில் நுழைந்து பரிசீலிக்கலாம்.
⚠ அனுமதி அட்டை கிடைக்காத தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் பிரதி மற்றும் பரீட்சைக் கட்டணம் செலுத்திய ரசீது / அஞ்சல் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் நேரடியாக பரீட்சைத் திணைக்களத்தை அணுக வேண்டும்.
பரீட்சை மண்டப விதிமுறைகள்
- வேறொருவர் சார்பாகப் பரீட்சை எழுதுதல் அல்லது எழுத உதவுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
- கணக்கீட்டு, தொழில்நுட்ப பாடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட எளிய கால்குலேட்டர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
- அரசாங்கப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் தனிப்பட்ட விண்ணப்பதாரராகப் பரீட்சை எழுத முடியாது.
- கைத்தொலைபேசி, ஸ்மார்ட் வொட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன — மீறினால் 5 வருடங்களுக்குப் பரீட்சைத் தடை.
- Bluetooth சாதனங்கள் பயன்படுத்தாதிருப்பதை உறுதி செய்ய, பரீட்சை நேரம் முழுவதும் இரு காதுகளும் திறந்திருக்க வேண்டும்.
| தொலைபேசி | 011-2784537 / 011-2784208 / 011-2786616 |
| மின்னஞ்சல் | gcealexam@gmail.com |
| தொலைநகல் | 011-2784422 |
| நேரடி அழைப்பு | 1911 |
24 மணிநேரமும் செயல்படும் அழைப்பு இலக்கங்கள்: 0112785211, 0112784208, 0112784537, 0112786616 | உடனடி: 1911
6/3/AL/2026 · 2026.07.24
பரீட்சை ஆணையாளர் நாயகம் — ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே
