🏛️ இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
க.பொ.த (சா.தரப்) பரீட்சை – 2025(2026)
பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்தல்
விண்ணப்பங்களை நிகழ்நிலை (Online) ஊடாக பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்
📋 Online விண்ணப்பம் இப்போது திறந்துள்ளது
விண்ணப்பங்களை நிகழ்நிலை (Online) ஊடாக பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்
முக்கிய அறிவிப்பு: பெறுபேற்று மீள்பரிசீலனையின் போது குறித்த விடைத்தாள்கள் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் சிலரால் முழுமையாகப் பரிசீலிக்கப்படும். விடைத்தாள் மீள்பரிசீலனையின் பெறுபேறாக புள்ளிகளில் அல்லது கிடைக்கப்பெறுள்ள தரங்களில் அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்பட வாய்ப்புண்டு என்பதை பரீட்சார்த்திகள் அறிந்திருக்கவேண்டும்.
முக்கிய தகவல்கள்
பரீட்சைக் கட்டணம்
ரூ. 200/- (ஒரு பாடத்திற்கு)
Credit / Debit Card அல்லது Bank Transfer
Credit / Debit Card அல்லது Bank Transfer
தேவையான ஆவணம்
தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் க.பொ.த (சா/த) 2025(2026) சுட்டெண்
SMS உறுதிப்பாடு
பணம் செலுத்திய பின்னர் தொலைபேசிக்கு SMS தகவல் கிடைக்கும்
PDF பதிவிறக்கம்
பணம் செலுத்திய பின்னர் விண்ணப்பத்தை PDF ஆக Download செய்து வைக்கவும்
விண்ணப்பிக்கும் முறைகள்
முறை 1: பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://www.docnets.lk இல் பிரவேசித்து "எமது சேவை" என்பதன் கீழ் உள்ள "Exam Information Centre" இன் மீது Click செய்வதன் மூலம்
முறை 2: நேரடியாக https://onlineexams.gov.lk/eic இன் பிரவேசிப்பதன் மூலம்
விண்ணப்பிக்கும் படிமுறைகள்
-
1குறித்த பரீட்சையின் மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் மாத்திரமே கோரப்படும்.
-
2பாடசாலைப் பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆகிய இருவகை பரீட்சார்த்திகளும் தாமே விண்ணப்பங்களை முன்வைக்க வேண்டும்.
-
3முறைமையினூல் பிரவேசிக்கும்போது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் க.பொ.த (சா/த) பரீட்சை – 2025(2026) இற்குரிய சுட்டெண்ணை பயன்படுத்த வேண்டும்.
-
4விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்துவதற்கு முன்னர் தொழிற்நுட்ப அறிவுறுத்தல்கள் (Technical Instructions), பொது அறிவுறுத்தல்கள் (Common Instructions) என்பவற்றை வாசித்தல் மற்றும் அறிவுறுத்தல் காணொளியைப் பார்வையிடல் என்பன சரியான முறையில் விண்ணப்பங்களைப் பூரணப்படுத்தத் தேவையாகும்.
-
5ஒரு பாடத்திற்குரிய மீள்பரிசீலனை கட்டணம் ரூ.200/- ஆகும். Credit Card / Debit Card மூலம் அல்லது தபாற் கந்தோரில் பணத்தைச் செலுத்தலாம்.
-
6பணத்தைச் செலுத்திய பின்னர் விண்ணப்பப்படிவத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் (Download) செய்ய முடிவதோடு, அவ் விண்ணப்பப்படிவத்தை உங்கள் பொறுப்பில் வைத்திருத்தல் வேண்டும்.
-
7மீள்பரிசீலனை செய்யத் தேவையான சகல பாடங்களையும் உள்ளடக்கியதாக விண்ணப்படிவங்களைச் சரியாக பூரணப்படுத்துவது விண்ணப்பதாரியின் பொறுப்பாகும். ஒரு தடவை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
-
8உரிய கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பத்திற்காகச் செலுத்தப்பட்ட கட்டணம் மீளக்கப்படமாட்டாது.
⚠️ முக்கியம்: பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பப்படிவங்களில் அதிபரின் பரிந்துரை / கையொப்பம் தேவைப்படாது என்பதை தயவுடன் கவனத்திற்கொள்க.
📞 தொடர்பு இலக்கங்கள்
📚
பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டுக் கிளை
011 2785231 / 011 2785681 / 011 2785662 / 011 2784037
☎️
உடனடி அழைப்பிற்கு
1911
🔧
தொழிற்நுட்ப உதவிகளுக்காக
0113661122 / 0113671568
