வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் நிலவும் சுகாதாரப் பணி உதவியாளர் (கனிஷ்ட) தரம் III பதவிகளுக்கான 300 வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன:
முக்கிய தகவல்கள்
- பதவி: சுகாதாரப் பணி உதவியாளர் (கனிஷ்ட) தரம் III
- வெற்றிடங்கள்: 300
- விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 05.05.2026
- நேர்முகப் பரீட்சை நடைபெறும் காலம்: 2026 மே மாதமளவில்
தகைமைகள்
1. கல்வித் தகைமை
க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- இதில் 02 பாடங்களில் திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருக்க வேண்டும்.
- ஒரு அமர்வில் ஆகக்குறைந்தது 05 பாடங்களிலாவது சித்தியடைந்திருத்தல் அவசியமாகும்.
2. வயது எல்லை
- 05.05.2026 அன்று விண்ணப்பதாரியின் வயது 18 - 45 இற்குள் இருக்க வேண்டும்.
3. வதிவிடத் தகைமை
- விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
- இறுதித் திகதிக்கு முன்னரான 06 ஆண்டுகளில் குறைந்தது 03 ஆண்டுகள் வட மாகாணத்தில் வசித்திருக்க வேண்டும்.
- அல்லது விண்ணப்பதாரி/பெற்றோர் வட மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு குறைந்தது 05 ஆண்டுகள் அங்கு வசித்திருக்க வேண்டும்.
சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்
- சம்பளம்: ரூபா 40,000 - 61,880/.$ (PL 1 - 2025 சம்பளத் தொகுதி)
- பதவித் தன்மை: இது ஒரு நிரந்தரமான மற்றும் ஓய்வூதிய உரித்துடைய பதவியாகும்.
- கட்டாய சேவை: நியமனம் பெறுபவர் அதே நிலையத்தில் குறைந்தது 05 வருடங்கள் சேவையாற்ற வேண்டும்.
- மூன்று வருட தகுதிகாண் காலத்திற்குள் முதலாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவம்: www.np.gov.lk என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பரீட்சைக் கட்டணம்: ரூபா 500/- இனை "செயலாளர், சுகாதார அமைச்சு, வடக்கு மாகாணம்" என்ற பெயரில் ஏதேனும் ஒரு பிரதேச செயலகத்தில் செலுத்தி, பற்றுச்சீட்டை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு,
வடக்கு மாகாணம், சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.
மேலதிக குறிப்பு: கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் "சுகாதாரப் பணி உதவியாளர் (கனிஷ்ட) தரம் III பதவிக்கான ஆட்சேர்ப்பு" எனக் குறிப்பிட வேண்டும்.
தேர்வு முறை (புள்ளி வழங்கும் திட்டம்)
- கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
- மேலதிக கல்வித் தகைமைகள்: 40 புள்ளிகள்
- அனுபவம்: 55 புள்ளிகள்
- நேர்முகப் பரீட்சை சபையினால் இனங்காணப்படும் தகுதிகள்: 05 புள்ளிகள்
- மொத்தம்: 100 புள்ளிகள்
மேலதிக விபரங்களுக்கு 021 222 0807 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்
Tags
Vacancy
