அகரம் Logo
N E W S

இலங்கை பொலிஸ் பிரிவு (SL POLICE) ஆட்சேர்ப்பு - 2026

 

இலங்கை  பொலிஸ் பிரிவு (SL POLICE) ஆட்சேர்ப்பு - 2026

கான்ஸ்டபிள் மற்றும் சிவில் அதிகாரி பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

விண்ணப்பிக்க இன்னும் மீதமுள்ள நேரம்:

கணக்கிடப்படுகிறது...

2026.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2442) இன் படி, இலங்கை இராணுவப் பொலிஸ் படைப்பிரிவில் நிலவும் வெற்றிடங்களுக்காக தகுதியுள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

01. கான்ஸ்டபிள் மற்றும் விசேட அதிரடிப்படை (STF)  பதவிகள்

அரசு வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2442) - திகதி: 2026.03.28

இலங்கை பொலிஸ் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்காக தகுதியுள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்வரும் விபரங்களுக்கு அமைவாக விண்ணப்பிக்க முடியும்.

1. அடிப்படைத் தகுதிகள்

  • வயது எல்லை: விண்ணப்ப இறுதித் திகதியன்று 18 - 24 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
  • திருமண நிலை: விண்ணப்பதாரர் திருமணமாகாதவராக (Unmarried) இருத்தல் கட்டாயமாகும்.
  • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

2. கல்வித் தகைமைகள்

தகைமை - 01

க.பொ.த (சாதாரண தரம்): கணிதம், அறிவியல், தாய்மொழி மற்றும் ஆங்கிலம் உட்பட 05 பாடங்களில் சித்தி. இதில் 02 பாடங்களில் திறமைச் சித்தி (C Pass) அவசியம். (அதிகபட்சம் 2 அமர்வுகள்)

- அல்லது -
தகைமை - 02

க.பொ.த (உயர்தரம்): சாதாரண தரத்தில் கணிதம், தாய்மொழி உட்பட 5 பாடங்களில் சித்தியுடன் (2 C Pass), உயர்தரத்தில் ஒரே அமர்வில் 02 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

3. உடல் தகைமைகள்

அளவீடு ஆண் கான்ஸ்டபிள் / STF பெண் கான்ஸ்டபிள்
குறைந்தபட்ச உயரம் 5 அடி 4 அங்குலம் (162.56 செ.மீ) 5 அடி 1 அங்குலம் (154.94 செ.மீ)
மார்பளவு 30 அங்குலம் (மூச்சை விடும்போது) பொருந்தாது

*குறிப்பு: தவறான தகவல்களை வழங்கும் விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.


02. பெண் கான்ஸ்டபிள் மற்றும் பெண் சிவில் அதிகாரி

1. அடிப்படைத் தகுதிகள் (General Requirements)

  • வயது எல்லை: விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 24 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
  • திருமண நிலை: விண்ணப்பதாரர் திருமணமாகாதவராக (Unmarried) இருத்தல் கட்டாயமாகும்.

2. கல்வித் தகைமைகள் (Educational Qualifications)

விண்ணப்பதாரர்கள் பின்வரும் இரண்டு முறைகளில் ஒன்றின் கீழ் கல்வித் தகைமையைக் கொண்டிருக்க வேண்டும்:

முறை 01:

க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் கணிதம், அறிவியல், தாய்மொழி (தமிழ்/சிங்களம்) மற்றும் ஆங்கில மொழி உள்ளிட்ட பாடங்களில் 05 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன், அதில் குறைந்தது 02 பாடங்களில் திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருக்க வேண்டும்.

அல்லது
முறை 02:

க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் கணிதம் மற்றும் தாய்மொழி உள்ளிட்ட பாடங்களில் 05 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன், க.பொ.த (உயர்தர) பரீட்சையில் ஒரே அமர்வில் 02 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

3. உடல் தகைமைகள் (Physical Requirements)

அளவீடு தேவைப்படும் அளவு
உயரம் குறைந்தது 5 அடி 4 அங்குலம் (162.56 செ.மீ) அல்லது அதற்கு மேல்
மார்பளவு மூச்சை வெளிவிடும் போது குறைந்தது 30 அங்குலம் (76.2 செ.மீ)

விண்ணப்ப முறைகள்

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஊடாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு: www.police.lk

Post a Comment

Previous Post Next Post