N E W S

கிழக்கு மாகாண இறைவரி திணைக்களத்தில் வேலைவாய்ப்பு 2026


கிழக்கு மாகாண பொதுச்சேவையின் இறைவரி திணைக்களத்தில் நிலவும் மாகாண வரி உத்தியோகத்தர் (தரம் II) மற்றும் மாகாண மதிப்பீட்டாளர் (தரம் III) ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2026 இற்கு தகுதியுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


முக்கிய விபரங்கள்:

  •  விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.03.20.

பதவிகள் மற்றும் வெற்றிடங்கள்:

  1. மாகாண வரி உத்தியோகத்தர் தரம் II - 01 வெற்றிடம்
  2. மகாண மதிப்பீட்டாளர் தரம் III - 02 வெற்றிடங்கள்

  •  வயது எல்லை: 20.03.2026 அன்று 35 வயதுக்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.
  •  பரீட்சைக் கட்டணம்: ரூபா. 1000/- (கிழக்கு மாகாணத்திலுள்ள ஏதேனும் ஒரு பிரதேச செயலகத்தில் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற வேண்டும்).


கல்வித் தகைமைகள்:


1. மாகாண வரி உத்தியோகத்தர் தரம் II:

  •  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம்.
  •  அல்லது சட்டத்தரணியாக இருத்தல்.
  •  அல்லது ICA (SL) இடைநிலைச் சான்றிதழ் / CIMA (UK) இடைநிலைத் தகைமை / அரச உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் வர்த்தகம் அல்லது முகாமைத்துவ இறுதிப் பரீட்சை சித்தி.


2. மாகாண மதிப்பீட்டாளர் தரம் III:

  •  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து முதலாம் அல்லது இரண்டாம் வகுப்புடன் கூடிய பட்டம்.
  •  அல்லது சட்டத்தரணியாக இருத்தல்.
  •  அல்லது Chartered/CIMA (UK) கணக்காளராக இருத்தல்.


விண்ணப்பிக்கும் முறை:

  •  விண்ணப்பங்களை A4 அளவிலான தாளின் இரு பக்கங்களையும் பயன்படுத்தி மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைய தயாரித்தல் வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2026.03.20 ஆந் திகதிக்கு முன்னர் "பதிவுத் தபாலில்" பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:

 

செயலாளர்,

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம்,

கன்னியா வீதி, வரோதயநகர், திருகோணமலை.

  

  •  உறையின் இடது பக்க மேல் மூலையில் "EX/Rec/26/05" என்ற குறியீட்டையும் பதவிப் பெயரையும் குறிப்பிடுதல் கட்டாயமாகும்.


தெரிவு முறை:

எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

  •  பரீட்சை மையங்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை.
  •  பரீட்சைப் பாடங்கள்: நுண்ணறிவு மற்றும் பொது அறிவு (மதிப்பீட்டாளர் பதவிக்கு மேலதிகமாக கிரகித்தல் பாடமும் உண்டு).


விசேட குறிப்பு: 

கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரச சேவையிலுள்ளவர்கள் தமது திணைக்களத் தலைவரூடாக விண்ணப்பிக்க வேண்டும்.


மேலதிக விபரங்கள், விண்ணப்ப படிவங்களுக்கு




E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post