2025 கல்வியாண்டின் இறுதிக் கட்டம் மற்றும் 2026 கல்வியாண்டின் தொடக்கத்திற்கான உறுதியான அட்டவணை மற்றும் முக்கியமான பரீட்சை திகதிகளை அறிவிக்கும் ஊடக வெளியீட்டை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதிகள் மற்றும் பரீட்சை திகதிகள்
இறுதி தவணை முடிவு/புத்தாண்டு விடுமுறை:
- மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெறாது 11ஆம் தரத்திற்கு மாத்திரம். முன் பரீட்சைப் பயிற்சி நடத்தப்படும்.
- தற்போது நாட்டின் அனைத்து மாகாணங்களுடனும் ஒருங்கிணைந்து நிலைமையை மீளாய்வு செய்ததற்கு அமைய, நாடளாவிய ரீதியில் உள்ள 10,076 பாடசாலைகளில் 9.929 பாடசாலைகள் 2025.12.16 ஆம் திகதி திறக்கப்படும்.
- அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட 147 பாடசாலைகள் தற்போது ஆரம்பிக்க முடியாத நிலையில் இருக்கின்றது.
- ஆசிரியர், அதிபர் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்காக பாடசாலை ஆரம்பம் டிசம்பர் 15ஆம் திகதி.
- மூன்றாம் தவணை 02ஆம் கட்டம் தொடக்கம்: அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் டிசம்பர் 16, 2025 செவ்வாய்க்கிழமை தொடங்கும் .
- டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் திகதி சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும்.
- அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும்.
- 2025ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலத்தின் இரண்டாம் கட்டம் 2025.12.16ஆம் திகதி முதல் 2025.12.22ஆம் திகதி வரை நடைபெறும்.
- கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் 2025.12.29ஆம் திகதி முதல் 2025.12.31ஆம் திகதி வரையும், முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02ஆம் திகதி வரையும் நடைபெறும்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நடாத்தப்படாத ஏனைய பாடங்கள் 2026 ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், அது தொடர்பான மேலதிக அறிவிப்புகளைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்..
பரீட்சை அட்டவணை
க.பொ.த சாதாரண தர (சா/த) தேர்வு: க.பொ.த சாதாரண தர தேர்வுக்கான பாடத்திட்டம் (2025 தொகுதிக்கு 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது) தரம் 11 வரை மட்டுமே உள்ளடக்கப்படும்.
க.பொ.த உயர்தர (உ/த) தேர்வு:
(2026 தொகுதிக்கான) க.பொ.த உயர்தர தேர்வு மற்றும் பிற எதிர்கால தேர்வுகள் தற்காலிகமாக டிசம்பர் 12, 2026 சனிக்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது .
