யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - கல்வியியல் முதுமாணி (M.Ed) கற்கைநெறி 2025/26
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் (Faculty of Graduate Studies) நடாத்தப்படும் கல்வியியல் முதுமாணி (Master of Education - Batch XVI) கற்கைநெறிக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
✅ அனுமதிக்குரிய தகைமைகள் (Qualifications):
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டம் மற்றும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE)
- அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்விமாணிப் பட்டம் (B.Ed)
- பாடசாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் அல்லது கல்விசார் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.
📋 கற்கைநெறி விபரங்கள்:
- ⏳ காலம்: 01 வருடம்
- 🗣 மொழி: தமிழ் / ஆங்கிலம்
- 💰 கற்கைநெறிக் கட்டணம்: ரூ. 205,000/- (ரூ. 5,000 மீளளிக்கப்படும்)
- ✍️ தெரிவு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
🗓 விண்ணப்ப முடிவுத்திகதி: 25/01/2026
📥 விண்ணப்பித்தல்
மக்கள் வங்கியின் கிளையொன்றில் குறிப்பு இலக்கம் 190162500001951 ஊடாக விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000/- ஐச் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவுத்தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 25/01/2026 இற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
📍 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
சிரேஷ்ட உதவிப்பதிவாளர்,
உயர்பட்டப்படிப்புகள் பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
விண்ணப்பப்படிவம்
மேலதிக தகவல்களுக்கு
