கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

இலங்கையின் பொதுக் கல்வியை நிலை மா‌ற்ற‌ம் - 2025

 


இலங்கை அரசாங்கம் கல்வியை ஒரு அடிப்படை உரிமையாகவும், தேசிய அபிவிருத்தியின் ஒரு மூலக்கல்லாகவும் அங்கீகரிக்கிறது. உணர்வு ரீதியாக அறிவுள்ள, சமூகப் பொறுப்புள்ள, சமூக மற்றும் கலாச்சார விழிப்புணர்வுள்ள, அரசியல் கல்வியறிவு பெற்ற, விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன் கொண்ட ஒரு பிரஜையின் விருத்தியானது. சம நியாயமான, விளைதிறனுடன் கூடிய, உட்படுத்தப்பட்ட, எதிர்காலம் சார்ந்த மற்றும் தேசிய முன்னுரிமைகள் மற்றும் சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப பதிலளிக்கக்கூடிய ஒரு வலுவான கல்வி முறையைப் பொறுத்ததாகும். ஆகையால், மிகவும் மேம்பட்ட கல்வி முறைமையொன்றினூடாக மாத்திரமே நாட்டின் அமைதி, சமூக நல்லிணக்கம், நல்லாட்சி, பொருளாதார செழிப்பு மற்றும் நிலைபேறுடன் கூடிய அபிவிருத்தியை உறுதி செய்ய முடியும்.


இந்தச் சூழ்நிலையின், பொதுக் கல்விக்கான விரிவான மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக 2026 முதல் தரம் 1 மற்றும் தரம் 6 இற்கான திருத்தப்பட்ட கலைத்திட்டங்கள் மூலம் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த மறுசீரமைப்புக்கள் கல்வியின் தரம், சமத்துவம் மற்றும் பொருத்தத்தை வலுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, கற்பவர்கள் வேகமாக மாறிவரும் உலகில் செழிக்கத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் பெறுமதிகளைக் கொண்டிருப்பவர்களாக இருப்பதை உறுதி செய்வதோடு மாத்திரமல்லாமல், ஒரு நெறிமுறை ரீதியான, உள்ளடக்கப்பட்ட, நீதியான, பன்மைத்துவ, நிலைபேறுடன் கூடிய மற்றும் பொறுப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான தொலைநோக்குத் தலைமையை வழங்குவதையும் உறுதி செய்கின்றன.


இந்தக் கொள்கை கட்டமைப்பானது முன்மொழியப்பட்ட நிலைமாற்றத்திற்கான அடித்தளத்தை வழங்குகிறது. மறுசீரமைப்பின் முக்கிய பரிமாணங்களை ஒன்றாக ஐந்து வெளிப்படுத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளது. மூலோபாயத் தூண்களைச் சார்ந்து இது


1. கலைத்திட்ட அபிவிருத்தி வளர்ந்து வரும் அறிவு, எதிர்கால திறன்கள் மற்றும் சமூக முன்னுரிமைகளுடன் அபிவிருத்தி மற்றும் சீரமைப்பு.


2. மனித வள அபிவிருத்தி கல்வியியலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் வாண்மைத்துவ விருத்தி மற்றும் இயலளவு விருத்தி


3. உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் மற்றும் கல்வி நிர்வாக கூடிய, வெளிப்படையான மறுசீரமைப்பு வினைத்திறனுடன் மற்றும் பொறுப்புடைமையுடன் கூடிய நவீன உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாக முறைமைகளில் முதலீடு செய்தல்.


4. கணிப்பீடு மற்றும் மதிப்பீடு -நியாயத்தன்மை மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்யும் திறன் அடிப்படையிலான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு வழிமுறைகள்


5. பொது மக்கள் விழிப்புணர்வு மற்றும் மேம்பாடு மறுசீரமைப்பில் பங்குதாரர் ஈடுபாடு, தொடர்பாடல் மற்றும் கூட்டு உரிமையை வலுப்படுத்துதல்


இந்தக் கல்விக் கொள்கை ஆவணமானது, ஒவ்வொரு தூணின் கீழும் பின்பற்றப்பட வேண்டிய மூலோபாய நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகளை கோடிட்டுக் காட்டுகிறது, இது கல்வி முறைமை முழுவதும் ஒருங்கிணைந்த நடைமுறைப்படுத்தலுக்கான ஒரு வரைபடமாக செயற்படுகிறது. இந்த ஆவணத்தை உருவாக்குவதற்காக பல முக்கிய பங்குதாரர்கள், அரச உத்தியோகத்தர்கள், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், சிவில் சமூகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.


இந்த முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்புக்களூடாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் மிக உயர்ந்த தரமான இலவச மற்றும் சமமான கல்வியை வழங்குவதற்கான அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புக்கள், தேசிய கல்வித் நியமங்களை வலுப்படுத்துவது மாத்திரமல்லாமல், இலங்கையர்களின் எதிர்கால சந்ததியினர் சமாதானமாகவும் சகவாழ்வுடனும் வாழ்வதற்கும், நன்கு செயற்படக்கூடிய மற்றும் நீதியான ஜனநாயகத்திற்குள் ஒரு தார்மீக மற்றும் நெறிமுறைகளுடன் கூடிய சமூகத்தை கூட்டாகக் கட்டியெழுப்புவதையும், தயார்படுத்துவதையும்ம் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.




E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் - National Diploma in Teaching [ R ] வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ‌கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மிகவும் முக்கியமான பாட விடயங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் முறைகள், நுட்பங்களை என்பனவற்றை பதிவேற்றப்படும்.

Post a Comment

Previous Post Next Post