அகநானூறு - 12
- பாடியவர் : கபிலர்
- திணை : குறிஞ்சி
- துறை : தோழி இரவுக்குறியை மறுத்து வரைவு கடாயது.
பாடல்:
பொருள் :
என்னுடைய தாயோ, என் கண்களைக் காட்டிலும் மிகவும் அன்பு கொண்டவள்.
என்னுடைய தந்தையோ, நான் நிலத்தில் அடி எடுத்து வைப்பதைக் கூடப் பொறுக்க மாட்டான். தன் மகளை நோக்கி
" 'சிறிய கால்கள் சிவக்கும்படியாக, நீ ஏன் நடக்கின்றாய்? ' என்று கேட்பார்."
நானும் இவளும் (தலைவியும் தோழியும்) பிரிவில்லாத, உறுதியான (துவர்ப்பில்லாத) நட்பினால் பொருந்தி,
இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு பறவை போல ஒரே உயிராய் ஒன்றுபட்டுள்ளோம்.
தினைப் புனத்தைக் காக்கும் அழகிய பெண்கள் விடாது ஆரவாரிக்கும் பொழுதெல்லாம் கிளிகள் தங்கள் இனத்தை அழைக்கும் இடத்தில், அணில் விளையாடும் கிளைகளையுடைய
பெரிய பழங்களையுடைய பலா மரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்குக் குறவர்கள் நட்டிய குடிசை மறையும்படி தேன் சொட்டும் வேங்கை மலர்கள் பரவியதைப் புலி என்று நினைத்து அஞ்சி புள்ளியுடைய யானைகள் முகிலினம் பொருந்திய மலைச் சரிவில் மூங்கில் முறிபட ஓடும் நல்ல மலைகளையுடைய நாடனே! நீ இரவு நேரத்தில் வந்தால் மென்மையான என் தோழி உயிர் வாழ மாட்டாள்!
(உன் வரவு அவளுக்குத் துன்பத்தையே தரும்.)