கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

குறுந்தொகை - "கொங்குதேர் வாழ்க்கை..."

குறுந்தொகை - 2


  • பாடியவர் - இறையனார்
  • திணை : குறிஞ்சி 
  • துறை : இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.
  • வரலாறு : செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்க இறைவன் தருமி மூலம் கொடுத்தனுப்பிய பாடல். 

பாடல் :

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி 
காமம் செப்பாது கண்டது மொழிமோ 
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் 
செறியெயிற் றரிவை கூந்தலின் 
நறியவும் உளவோ நீயறியும் பூவே.


பொருள் :

பூக்களிடையே காணப்படுகின்ற மகர்ந்த மணிகளை ஆராய்ச்சி செய்கின்ற அழகிய சிறையையும் உடைய வண்டே! என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல் நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக; நீண்ட நாட்களாக பழகி நெருக்கமான நட்பையும், மயில் போன்ற அழகிய சாயலையும் கொண்ட நெருங்கிய பற்களையும் உடைய என் தலைவியின் கூந்தலைப் போல நீ அறியும் மலர்களுள் நறுமண முடைய பூக்கள் ஏதும் உள்ளனவோ?


கருத்து : தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது. 


Print Friendly and PDF

Post a Comment