அகரம் Logo
N E W S

தரம் 05 மாணவர்களுக்கான விசேட செயலட்டைத் தொகுப்பு

80+ PROJECT

தரம் 05 மாணவர்களுக்கான விசேட செயலட்டைத் தொகுப்பு

(80 புள்ளிகளுக்கு கீழ் பெறும் மாணவர்களுக்கு பொருத்தமானது)

வெளியீடு சபரகமுவ மாகாணம்
பிரிவு ஆரம்பக் கல்வி – தமிழ்ப் பிரிவு

முன்னுரை

கல்வியே சமூகத்தை மாற்றும் ஆயுதமாகும். சிறுபராய கல்வி என்பது மாணவரை நல்வழிப்படுத்தி ஒழுங்கை கடைப்பிடிக்கச் செய்யும் ஓர் சிறப்பாயுதம். இதனையே "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்றனர் எம் முன்னோர்.

இந் நூலாக்கமானது எமது வலயத்தில் மாகாண வினாத்தாளில் 80 புள்ளிகளுக்கு குறைந்த மாணவர்களுக்கு வழிகாட்டும் படைப்பாகவும், ஏனையோருக்கு பயிற்சிக்கான படைப்பாகவும் அமையுமென எதிர்ப்பார்க்கிறோம். இந்நூலின் அடிப்படை தமிழ், கணிதம், சுற்றாடல் பகுதிகளிலிருந்து முதலாம் தவணைக்கும் இரண்டாம் தவணைக்கும் பொருந்தும் அமைப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் எமது வலயத்தின் எழுதப்படுகின்ற கற்றல் குறைப்பாடு எனும் வினாவுக்கு ஓர் விடையளிப்பதாகவும் துணைச்சாதனமாகவும் இந்நூல் அமையுமென எதிர்பார்க்கிறோம்.

"கல்விக்கரம் கொண்டு பாரினில் ஏற்றிடுவோம்"

நோக்கம்

  • சகல மாணவர்களையும் 70 புள்ளிகளிற்கு மேல் புலமை பரிசில் பரீட்சையில் பெற வைத்தல்.
  • பரிகார கற்பித்தலாக பயன்படுத்தி மாணவர் அடைவை மதிப்பிடல்.
  • சகல மாணவர்களுக்கும் கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • மெல்ல கற்கும் மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் செயற்பாடாக அமைதல்.

Post a Comment

Previous Post Next Post