அகரம் Logo
N E W S

கிழக்கு மாகாண சபை - முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - தரம் III - திறந்த போட்டிப் பரீட்சை - 2026

அறிவித்தல் இலக்கம்: EX/REC/26/08

கிழக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026

கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட பிரஜைகளிடமிருந்து 123 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

📝 முக்கிய தகவல்கள்
123வெற்றிடங்கள்
18–35வயது எல்லை
Rs. 1,000பரீட்சைக் கட்டணம்
2026.08.14விண்ணப்ப முடிவுத் திகதி
விண்ணப்பிக்கும் முறை: நிகழ்நிலையில் (Online) மாத்திரம் – www.ep.gov.lk → Exams → Online Application
விண்ணப்பங்கள் ஏற்கப்படும் காலம்: 2026.07.15 மு.ப. 9.00 மணி முதல் 2026.08.14 பி.ப. 10.00 மணி வரை

📝 பொதுவான தகைமைகள்

  • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும் – விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னரான ஆறு வருடங்களில் ஆகக் குறைந்தது தொடர்ச்சியாக மூன்று வருடமாவது கிழக்கு மாகாணத்தில் வசித்திருத்தல் வேண்டும்.
  • சிறந்த நல்லொழுக்கமும் சிறந்த உடல் உள ஆரோக்கியமும் உடையவராக இருத்தல் வேண்டும்.
  • வயது: 18 வயதுக்குக் குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் (விண்ணப்பங்கள் ஏற்கப்படும் இறுதித் திகதியில்).

🎓 கல்வித் தகைமைகள்

  • கல்விப் பொதுத் தராதரப் (சாதாரண தர) பரீட்சையில் மொழி (தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்) மற்றும் கணிதம் உட்பட நான்கு பாடங்களில் திறமைச் சித்தியுடன், ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  • அத்துடன், கல்விப் பொதுத் தராதரப் (உயர் தர) பரீட்சையில் சாதாரண பொதுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

சம்பள அளவுத்திட்டம்

மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் III பதவிக்கான திரட்டிய சம்பள அளவுத்திட்டம் (MN 02-2025):

Rs. 48,470 – 10x540 – 11x630 – 10x1,010 – 10x1,190 – 82,800/-

குறிப்பு: தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு இச்சம்பளத்திற்கு உரித்தாவது 2027.01.01 ஆம் திகதியிலிருந்தாகும்.

✍️ பரீட்சைத் திட்டம்

எழுத்துப்பரீட்சை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் மூலம் நடாத்தப்படும் (விண்ணப்பித்த பின்னர் மொழியை மாற்ற இடமளிக்கப்படமாட்டாது). இரண்டு வினாப்பத்திரங்கள் உள்ளன:

வினாத்தாள்மொத்தப் புள்ளிகள்நேரம்சித்தியடைவதற்கான புள்ளி
உளச்சார்பு பரீட்சை10001 மணித்தியாலம்40%
மொழியாற்றல்10002 ½ மணித்தியாலங்கள்40%

தெரிவு செய்யப்படும் பரீட்சார்த்திகள் ஒவ்வொரு வினாப்பத்திரத்திலும் குறைந்தபட்சம் 40% புள்ளிகள் பெறுவதுடன் மொத்தப் புள்ளிகளில் குறைந்தபட்சம் 50% ஐப் பெற்றிருத்தல் வேண்டும்.

பரீட்சை நடைபெறும் நகரங்கள்

நகர இலக்கம்நகரம்
01திருகோணமலை
02மட்டக்களப்பு
03அம்பாறை
04கல்முனை

ஒரு பரீட்சை நகரம் சார்பாகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறையுமிடத்து அருகிலுள்ள பரீட்சை நகரத்திற்கு மாற்றப்படலாம்.

பரீட்சைக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

  • பரீட்சைக்கட்டணம் Rs.1,000/– ஆகும். இக்கட்டணத்தை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு முன்னர் செலுத்தி, பற்றுச்சீட்டை நிகழ்நிலையில் பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப்படிவத்தை நிகழ்நிலை (online) ஆங்கில மொழி மூலத்தில் பூர்த்தி செய்தல் வேண்டும்.
  • விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்குப் பின்னர், அச்சுப்பிரதியை (Printout) தரவிறக்கம் செய்து கையொப்பமிட்டு, பற்றுச்சீட்டுடன் இணைத்து குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
⚠️ பரீட்சைக் கட்டணங்கள் மீள வேறு பரீட்சைகளுக்கு மாற்றுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது. காசுக்கட்டளைகள், முத்திரை என்பன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
☎️ தொடர்பு: 026-2228368
✅ அறிவித்தல் இலக்கம்: EX/REC/26/08 – இதனைக் குறிப்பிட்டு “கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், கன்னியா வீதி, வரோதயநகர், திருகோணமலை” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
🏢 அறிவிப்பு வெளியிட்டவர்: ஜே. லியாகத் அலி, செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், திருகோணமலை – 15.07.2026

Post a Comment

Previous Post Next Post