அகரம் Logo
N E W S

2027 – தரம் 1 பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதித்தல் தொடர்பான சுற்றறிக்கை

சுற்றறிக்கை இலக்கம் 25/2026

2027 – தரம் 1 பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதித்தல்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு – “இசுருபாய” பெலவத்தை, பத்தரமுல்ல | 2026.06

 பாடசாலைகளின் தரம் 1’க்கு பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பாக, முன்னர் வெளியிடப்பட்ட 25/2025 சுற்றறிக்கையை திருத்தி, 2027 ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பின்னரும் நடைமுறைப்படுத்தப்படும் புதிய சுற்றறிக்கை இது.

✅ பிள்ளைகளை அனுமதிப்பதற்கான அடிப்படைத் தகைமைகள்

  • 2027 ஜனவரி 31 ஆம் திகதியன்று பிள்ளைக்கு 5 வயது பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்.
  • பிறப்புச் சான்றிதழ் மூலம் வயது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • தரம் ஒன்றிற்கு பிள்ளைகள் சிங்களம் / தமிழ் மொழி மூலங்களுக்கு மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.

 பிள்ளைகளை அனுமதிப்பதற்கான வகுதிகளும் புள்ளி விநியோகமும்

வகுதிசதவீதம்
பாடசாலைக்கு அண்மையில் வசிப்போரின் பிள்ளைகள்50%
பழைய மாணவ/மாணவியரான பெற்றோரின் பிள்ளைகள்25%
ஏற்கனவே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் சகோதர/சகோதரிகள்14%
அமைச்சு / அரச பாடசாலைக் கல்வியுடன் நேரடியாக தொடர்புடைய நிறுவனங்களின் பணிக்குழுவைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள்06%
அரசாங்க இடமாற்றங்களைப் பெற்ற அரச/கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களின் பிள்ளைகள்04%
பிள்ளையுடன் வெளிநாட்டிலிருந்து வசித்துவிட்டு வருகை தரும் நபர்களின் பிள்ளைகள்01%

 முக்கிய கால வரையறைகள்

தகைமைகள் கருத்திற்கொள்ளப்படும் இறுதித் திகதிஜூன் 30
விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிஜூலை 30
நேர்முகப் பரீட்சைகளை நடாத்துதல்செப்டம்பர் 30 இற்கு முன்
தற்காலிகப் பட்டியலை அறிவித்தல் (பலகையில்)ஒக்டோபர் 15
மேன்முறையீடுகள் / ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதிஒக்டோபர் 31
மேன்முறையீடுகள் பரிசீலித்தல்நவம்பர் 16 – டிசம்பர் 13
இறுதிப் பட்டியலை வெளியிடுதல்டிசம்பர் 20
தரம் 1 வகுப்புகள் ஆரம்பித்தல்பாடசாலை வருடம் ஆரம்பமாகும் முதலாவது நாள்

 விண்ணப்பிக்கும் முறை

  • பெற்றோர் / சட்டப்பூர்வமான பாதுகாவலர்கள், விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தொடர்புடைய பாடசாலை அதிபரிடம் ஜூன் 30 இற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அனைத்து ஆவணங்களும் (பிறப்புச் சான்றிதழ், வதிவிடம் உறுதிப்படுத்தும் ஆவணங்கள், வாக்காளர் இடாப்புப் பதிவு போன்றவை) சத்தியக்கடதாசி மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு வகுதிக்கும் உரிய தகுதி வழிகாட்டல் மற்றும் புள்ளி விநியோக முறை தொடர்பான முழு விபரங்களை முழுச் சுற்றறிக்கையில் காணலாம்.

⚠️ பிள்ளைகளை அனுமதிப்பதற்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது வேறு எந்தவொரு பொருட்களையும் அறவிடுவது/பெற்றுக்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post