அகரம் Logo
N E W S

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை — விடைத்தாள் மதிப்பீட்டாளர்கள் விண்ணப்பம் — 2026

விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்

விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2025 | விடைத்தாள் பரீட்சகர்கள் தெரிவு

01 விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்
  • 1.1 2011.03.01ம் திகதியிட்டு திருத்தியமைக்கப்பட்ட 03(01) 2009ம் இலக்க சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
  • 1.2
    கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பெற்று தற்போது கல்வி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் கடமைபுரிபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்:
  • (அ) ஆரம்பக் கல்வியில் ஆசிரியர் பயிற்சி / கல்வியியற் கல்லூரி ஆரம்பப்பயிற்சி / பட்டம் பெற்று தற்போது தரம் 3 முதல் 5 வரையுள்ள வகுப்புகளில் கற்பித்தல் கடமையில் ஈடுபடும், 3 வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக்காலத்தை கொண்ட ஆசிரியராயிருத்தல்.
  • (ஆ) கடந்த காலங்களில் புலமைபரிசில் பரீட்சையின் மதிப்பீட்டுக் கடமைகளில் சம்பந்தப்பட்ட ஆரம்ப கல்வி பாடத்திட்டத்திற்குரிய ஆசிரிய ஆலோசகர் சேவையின் அலுவலராயிருத்தல்.
  • 1.3 இல 09 ஐப் பூரணப்படுத்தும்போது பாடநெறியைக் குறிப்பிடல் கட்டாயமாகும்.
    உதாரணம்: ஆரம்பநெறி / விஞ்ஞானம் / கணிதம் என்றவாறு
  • 1.4
    விண்ணப்பப்படிவத்தின் 12ம் 13ம் பந்திகளைப் பூரணப்படுத்தும்போது 'ஆம்' அல்லது 'இல்லை' என்பதை தெளிவாக (✓) அடையாளமிட்டு குறித்துக்காட்டுக. அவ்வாறு நிரப்பப்படாத விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும்.
    ⚠️ கவனிக்கவும்: தற்போது உங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் நடைபெறுமாயின் அல்லது நீங்கள் பரீட்சைக் கடமைகளில் இருந்து தடைசெய்யப்பட்டிருப்பின், இப்பதவிக்கான விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.
  • 1.5 குடும்ப உறுப்பினர் எனப்படுவோர் – உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்களினதும் துணைவரினதும் சகோதர சகோதரிகளும், அவர்களது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் ஆவர்.
  • 1.6 ஆசிரியர்களின் விண்ணப்பப்படிவங்கள் நிகழ்நிலையில் (Online) அதிபரினால் சான்றுபடுத்தப்பட்டு, நிகழ்நிலை முறையில் இத் திணைக்களத்திற்கு அனுப்பப்படல் வேண்டும்.
  • 1.7
    மேற்படி பரீட்சையின் மதிப்பீட்டு நிலையங்கள் கீழ்வரும் நகரங்களில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது:
    01 கொழும்பு
    02 மகரகம
    07 அவிசாவலை
    08 ஹொரண
    10 களுத்துறை
    12 நீர்கொழும்பு
    13 கம்பஹா
    14 நிட்டம்புவ
    15 இரத்தினபுரி
    17 அம்பிலிப்பிட்டிய
    19 பண்டாரவளை
    20 பதுளை
    22 மஹியங்கன
    23 அம்பலங்கொட
    24 எல்பிட்டி
    25 காலி
    26 அக்குரஸ்ஸ
    27 மாத்தறை
    28 தங்காலை
    30 குருநாகல்
    31 நிக்கவெரட்டிய
    32 குளியாப்பிட்டி
    33 சிலாபம்
    35 அனுராதபுரம்
    36 பொலன்னறுவை
    37 திருகோணமலை
    38 கேகாலை
    39 பேராதெனிய
    41 கண்டி
    42 மாத்தளை
    44 நுவரெலியா
    45 ஹட்டன்
    46 மொனராகலை
    47 அம்பாறை
    48 கல்முனை
    50 மட்டக்களப்பு
    51 வவுனியா
    53 யாழ்ப்பாணம்
    54 நெல்லியடி
    55 கிளிநொச்சி
    56 புத்தளம்
    57 தம்புள்ள
    📌 குறிப்பு: போதியளவு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத நகரங்களில் மதிப்பீட்டு நிலையங்கள் நிறுவப்படமாட்டாது. எனவே இரண்டாவது தெரிவையும் குறிப்பிட வேண்டும்.
  • 1.8 மதிப்பீட்டுப் பணிக்காக அலுவலக முகவரிக்குக் கிட்டிய மதிப்பீட்டு நிலையங்கள் இரண்டிற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அந்த நகரங்களில் குறித்த பத்திரத்திற்கான மதிப்பீட்டுக் குழுக்கள் அல்லது போதியளவு வெற்றிடங்கள் இல்லாவிடின் வேறு கிட்டிய மதிப்பீட்டு நிலையத்திற்கு நியமனம் வழங்கப்படும்.
  • 1.9 இவ்விண்ணப்பப்படிவத்தின் 15ம் பந்தியைத் தவிர்ந்த ஏனையவற்றைப் பூர்த்தி செய்தபின் அதிபரிடம் / நிறுவனத் தலைவரிடம் ஒப்படைக்கவும்.

02 உறுதிப்படுத்தும் அலுவலர்
ஆசிரியர்களின் விண்ணப்பப்படிவங்கள் பாடசாலை அதிபராலும், ஆசிரிய ஆலோசகர்கள் வலயத்தில் பணியாற்றுவார்களாயின் வலயக் கல்விப் பணிப்பாளராலும், கோட்டத்தில் பணியாற்றுவார்களாயின் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களாலும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

03 உறுதிப்படுத்தும் அலுவலருக்கான அறிவுறுத்தல்கள்
  • 3.1 இப்படிவத்தில் விண்ணப்பதாரியால் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் யாவும் சரியானவிதா என்பதைக் கவனமாகப் பரிசீலிக்கவும்.
  • 3.2 மேலே தரப்பட்டுள்ள விபரங்கள் சரியென 3ம் பக்கத்திலுள்ள உரிய இடத்தில் கட்டாயமாக உறுதிப்படுத்துக.
  • 3.3
    மேலே இல. 15 (இ) இல் (i) முதல் (iv) வரையான விவரங்களின் கீழ் விண்ணப்பதாரி பற்றிய உங்கள் கணிப்பை உரிய கூடுகளில், பின்வருவனவற்றுள் தகுந்த குறியீட்டால் அடையாளப்படுத்துக:
    குறியீடு பொருள்
    Aசிறப்பானது
    Bநன்று
    Cசாதாரணம்
    Wதிறமையின்மை
    இது அந்தரங்க அறிக்கையாகும். பூரணப்படுத்தப்பட்ட சகல விண்ணப்பப்படிவங்களையும் உறுதிப்படுத்திய பின் கோவைப்படுத்தப்பட்ட உரிய இணைப்புகளுடன் தமது அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
📋 அனுப்பவேண்டியவை: புதிய விண்ணப்பதாரிகளினதும் பாடசாலை ஆசிரியர்கள் அல்லாத சகல விண்ணப்பதாரிகளினதும் நிகழ்நிலை முறையில் தகவல்கள் சரியாக இல்லாத அனுபவசாலிகளான விண்ணப்பதாரிகளினதும் விண்ணப்பப்படிவங்களை இணைப்புக்களுடன் (குறித்த சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளுடன்) பட்டியற்படுத்தி பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
✉️ கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் குறிப்பிடவும்:
"விடைத்தாள் பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2025"
அனுப்ப வேண்டிய முகவரி

பரீட்சை ஆணையாளர் நாயகம்,
பாடசாலைப் பரீட்சைகள் மதிப்பீட்டுக் கிளை,
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,
த.பெ.இல – 1503,
கொழும்பு.
📅 அனைத்து விண்ணப்படிவங்களையும் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 2025 யூன் 27 (2025.06.27)
⚠️ இறுதி குறிப்பு: சரியான தகவல்களை முன்வைக்கத் தவறின் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு கிடைக்காது போக சந்தர்ப்பம் உள்ளது. எனவே தகவல்களைச் சரியாகப் பூர்த்தி செய்து மீளவும் பரீட்சித்து விண்ணப்பிக்கவும்.

Post a Comment

Previous Post Next Post