கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பம் தொடர்பாக கல்வி அமைச்சின் புதிய தகவல்



பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளுதல்


01. நாடெங்கும் உள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளையும் ஏனைய பட்டதாரிகளையும் இலங்கை ஆசிரியர் சேவைக்குச் சேர்த்துக்கொள்வதற்கான அறிவித்தல் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் கோரும்


02. 2474/18ஆம் இலக்க மற்றும் 2026.02.02ஆம் திகதி குறிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக. 2023.02.10ஆம் திகதியன்று அரச சேவையில் இருக்கும். தற்போது வரை அரச சேவையில் இருக்கும், 2023.02.10ஆம் திகதியன்று 45 வயதுக்கு மேற்படாத, மற்றும் அத்திகதிக்குப் பட்டத் தகைமையைப் பூர்த்தி செய்த வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு


03. 2474/19ஆம் இலக்க மற்றும் 2026,02,02ஆம் திகதி குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகப் பின்வரும் பிரிவுகளின் கீழ் பட்டத் தகைமையைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2023.02.10ஆம் திகதியன்று 40 வயதுக்கு உட்பட்ட, வர்த்தமானி அறிவித்தலின்படி பட்டத் தகைமையைப் பூர்த்தி செய்த, அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள்.

2023.02.10ஆம் திகதியன்று 40 வயதுக்கு உட்பட்ட, வர்த்தமானி அறிவித்தலின்படி பட்டத் தகைமையைப் பூர்த்தி செய்து, 2023.02.10இற்குப் பின்னர் அரச சேவையில் நியமனம் பெற்றுத் தற்போது வரை சேவையில் இருக்கும் உத்தியோகத்தர்கள்.


2023.02.10ஆம் திகதியன்று 40 வயதுக்கு உட்பட்ட, வர்த்தமானி அறிவித்தலின்படி பட்டத் தகைமையைப் பூர்த்தி செய்து, 2023.02.10ஆம் திகதியன்று அரச சேவையில்


இருந்தபோதிலும், தற்போது உத்தியோகபூர்வ அனுமதியுடன் அப்பதவியிலிருந்து விலகியிருக்கும் உத்தியோகத்தர்கள்.


2023.02.10ஆம் திகதியன்று 40 வயதுக்கு உட்பட்ட, அந்தத் திகதியிலேயே அரச சேவையில் பதவியொன்றை வகித்து வந்த, வர்த்தமானி அறிவித்தலின்படி 2023.02.10ஆம் திகதிக்குப் பின்னர் பட்டத் தகைமையைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள்.


04. 2023.01.27ஆம் திகதி வெளியிடப்பட்ட 2317ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தற்போது வரை அரச சேவையில் இருப்பார்களாயின், இந்த வர்த்தமானியின்படி மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. முன்னைய விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம். கடிதத் தொடர்பு முகவரி என்பவற்றில் மாற்றம் இருப்பின் மாத்திரம், பரீட்சைத் திணைக்களத்தின் உரிய இணைப்புகள் ஊடாகக் கோரிக்கைகளை முன்வைத்து மாற்றங்களைச் செய்யவும், விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் - National Diploma in Teaching [ R ] ( வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ) 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். - ✅ செய்திகள் - ✅ பரீட்சை வினாத்தாள்கள் - ✅ கடந்த கால வினாத்தாள்கள் - ✅ செயலட்டைகள் - ✅ பாடக்குறிப்புக்கள் - ✅ புத்தகம் & மொடியுள் - ✅ அறிக்கைகள் - ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post