2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை தொழில்நுட்ப சேவையில் தொழில்நுட்ப அதிகாரிகள் (தரம் III) ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டித் பரீட்சையை நிதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பரீட்சை மே 2026 இல் கொழும்பு மாவட்டத்தில் பரீட்சைகள் ஆணையர் நாயகத்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதி:
போட்டியாளர்கள் சிறந்த குணநலன் கொண்ட இலங்கை குடிமக்களாக இருக்க வேண்டும்.
வயது எல்லை :
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி தேதியின்படி 18 முதல் 30 வயது வரை.
கல்வித் தகுதிகள்:
• க.பொ.த. (உ/த):
ஒரே அமர்வில் பொதிக, விஞ்ஞான பிரிவில் (தூய/பயன்பாட்டு/ஒருங்கிணைந்த கணிதம் மற்றும் பௌதிகவியல் ) அல்லது தொழில்நுட்ப பிரிவில் (பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம்) 3 பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• க.பொ.த. (சா/த):
மொழி (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்), கணிதம், விஞ்ஞானம் மற்றும் வேறு ஒரு பாடத்திற்கான கிரெடிட் [C] சித்திகளுடன் ஒரே அமர்வில் 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• தொழில்முறை தகுதிகள்:
போட்டியாளர் சிவில் துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப டிப்ளோமா பட்டம் பெற்றிருக்க வேண்டும் (எ.கா: மொரட்டுவ/ஹார்டி, NDES, HNDE, அல்லது NVQ நிலை 6).
• குறிப்பு:
தேவையான தொழில்முறை தகுதிகளைக் கொண்ட போட்டியாளர்கள் கிடைக்கவில்லை என்றால், கல்வித் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்பவர்கள் பயிற்சி தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படலாம்.
வர்த்தமானி - Click Here (2026.01.09)
வலைத்தளம் - www.doenets.lk
இறுதி திகதி : 2026.02.06
