2026 - Aswesuma - அஸ்வேசும - மீள் சான்றளிப்பு விண்ணப்பம்
2026 ஆம் ஆண்டிற்கான அஸ்வேசும நலன்புரி கொடுப்பணவிற்கான மீள் சான்றளிப்பு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
[ விண்ணப்ப இறுதித் திகதி - 2025.12.31 ]
எனவே, இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேரடியாக கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்க முடியும்.
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய - Click Here
மேலும், நிகழ்நிலை [Online] மூலமாகவும் இலகுவாக விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய முடியும்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்படும் Link ஐ கிளிக் செய்து விண்ணப்பிக்க முடியும்.
ONLINE விண்ணப்பம் - Click Here
Online ஊடாக விண்ணப்பிக்கும் படி முறை:
1. மொழியினை தெரிவு செய்யவும்
2. அஸ்வேசும கணக்கு இலக்கத்தை HH- ஐ தொடர்ந்து உள்ளிடவும். [ QR தாளில் உள்ள இலக்கம்]
உதாரணமாக : HH-x-x-xx-xxx-xxxxx
3.தொலைபேசி இலக்கத்திற்கு SMS மூலம் வரும் OTP ஐ உள்ளிடவும்.
4. மீள் சான்றளிப்பை தெரிவு செய்யவும்
5. கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான பதிலை உள்ளிடவும்.
Note :
01. தற்போது உங்கள் குடும்பத்தில் உள்ள அல்லது குடும்பத்தை விட்டு நீங்கிய அங்கத்தவர்களை நீக்குதல் / புதிதாக சேர்க்க வேண்டும்.
[ உங்கள் குடும்பத்தில் ஒருவர் பிறந்தால் அவரின் பெயர், வயது என்பவற்றை உள்ளிட வேண்டும். / உங்கள் குடும்பத்தில் ஒருவர் திருமணம் ஆகி வெளியேறும் பட்சத்தில் அவரை நீக்க வேண்டும்.]
02. வங்கி கணக்கு இலக்கங்கள் மாற்றப்பட்டு இருப்பின் அதை மாற்றம் செய்ய வேண்டும்.
03. சமுர்த்தி வங்கி கணக்கு இலக்கம் 12 இலக்கங்களை உடையது. அதை மாத்திரம் உள்ளீடு செய்யவும்.
04. நீங்கள் உள்ளீடு செய்த அனைத்து தகவல்களும் சரியானதா என பரிசீலனை செய்யவும்.

