கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

கலப்பு கற்றல்


கலப்பு கற்றல்

BLENDED LEARNING


கலப்பு கற்றல் தொழில்நுட்பம் மற்றும் மெய்நிகர் செயற்பாடுகளை பாரம்பரிய கற்பித்தலுடன் ஒருங்கிணைக்கும் கற்பித்தல் முறை இது உயர் கல்வியில் மதிப்பைக் கொண்டுள்ளது திட்டமிட்ட செயற்பாடுகளைப் பயன்படுத்துகிறது. பாரம்பரிய வகுப்பறை கற்றல் மற்றும் இணையவழி கற்றலையும் இணைக்கும் ஒரு கற்பித்தல் முறை ஆகும்.


கலப்பு கற்றலானது இணையவழி கற்றல், தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் மற்றும் தெளிவான கற்றல் எனவும் அழைக்கப்படும்.இவ் கலப்பு கற்றல் ஆங்கிலத்தில் BLENDED LEARNING (B-LEARNING) என்றும் அழைக்கப்படும். மாணவர்கள் பயிற்றுவிப்பாளர், பெளதீக வகுப்பறை மற்றும் இணையதளம் மூலம் தொடர்பு கொள்கின்றார்கள். அத்தோடு கலப்பு கற்றலானது ஆசிரியர், மாணவர்களின் முடிவுகளை பரிசோதிக்க அனுமதிக்கும் ஒரு வழியாகும். ஆசிரியர்கள், மாணவர்களுடன் தொடர்ந்தும் தொடர்பு கொள்கின்ற மன்றங்கள் நேரடி செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மூலம் மாணவர்களால் முன்வைக்கப்படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் தீர்க்கப்படுகின்றன.


புரட்டப்பட்ட கற்றலின் பரிணாமம் கலப்பு கற்றல்

புரட்டப்பட்ட கற்றல் செயல் விசாரணை மற்றும் கூட்டுக் கற்றலை ஊக்குவிக்கிறது. இந்த மாதிரியானது மாணவர்கள் வீட்டில் ஒரு தலைப்பை படிக்கவும், பாடசாலைக்குச் செல்லவும், விவாதத்திற்கு தயாரிக்கவும், அவர்களது சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளவும் யோசனைகளை வழங்கவும், வகுப்பறை செயலில் பங்கேற்பவர்களாகவும் இருக்க அனுமதிக்கிறது.


கலப்பு கற்றல் வகைகள்

1. ஆய்வக சுழற்சி கலந்த கற்றல

2. நிலைய சுழற்சி கலந்த கற்றல்

3. தொலைநிலை கலந்த கல்வி

4. Flex கலந்த கற்றல்

5. புரட்டப்பட்ட வகுப்பறை கற்றல்

6. தனிப்பட்ட சுழற்சி கலந்த கற்றல்

7.திட்ட அடிப்படையிலான கலப்பு கற்றல்

8. சுய இயக்கம் கலந்த கற்றல்

10. உள்ளே வெளியே கலந்த கற்றல்

11. வெளியில் கலந்த கற்றல்

12. துணை கலப்பு கற்றல்

13. கலப்பு தேர்ச்சி அடிப்படையிலான கற்றல் கலப்பு


கலப்பு கற்றல் வீதம்

கலப்பு கற்றல் வீதம் என்பது ஒரு நிறுவனம் அல்லது குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நடைபெறும் கற்றல் செயற்பாட்டில், நேரடி வகுப்பறை கற்றல் மற்றும் இணையவழி கற்றல் ஆகிய இரண்டையும் எந்த அளவுக்கு இணைந்துப் பயன்படுத்துகின்றார்கள் என்பதை குறிக்கும் ஒரு அளவீடு ஆகும்.

உதாரணம்:- (ஒரு பாடசாலையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொண்டு மீதமுள்ள இரண்டு நாட்கள் இணையவழி மூலம் பாடங்கள் கற்கின்றனர். என்றால் அந்த பள்ளியின் கலப்பு கற்றல் 60% என்று கூறலாம்.


கலப்பு கற்றல் ஏன் முக்கியம்

  • மாணவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தல் ஒவ்வொரு மாணவரின் கற்றல் முறை வேறுபட்டிருக்கும். கலப்பு கற்றல் மாணவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு கற்கும் வாய்ப்பை வழங்குகிறது.
  • கற்றல் திறனை மேம்படுத்தல் நேரடி வகுப்பறையில், online மூலம் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதோடு online மூலம் தங்களுக்கு தேவையான பகுதிகளை மீண்டும் மீண்டும் பார்த்து கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • தொழில்நுட்ப திறனை மேம்படுத்தல். இணையவழி கற்றல் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
  • கொரோனா போன்ற சூழ்நிலைகளில் தொடர்ச்சியான கற்றலை பெறல். நேரடி வகுப்பறையில் நடைபெற முடியாத சூழ்நிலைகளில் இணையவழி கற்றல் மூலம் கல்வி தொடர்ச்சியாக நடைபெறும்.


கலப்பு கற்றல் முக்கிய அம்சங்கள்.

  • நெகிழ்வான கற்றல்:- மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் மற்றும் இடத்தில் கற்றுக்கொள்ள முடியும்.
  • தனியாக்கப்பட்ட கற்றல் - ஒவ்வொரு மாணவரின் தேவைகளுக்கும் ஏற்ப கற்றல் பொருட்கள் மற்றும் செயற்பாடுகளைத் தேர்வு செய்யலாம்.
  • பல்வேறு கற்றல் முறைகள் - VIDEO, AUDIO, உரையாடல்கள் செயல்பாடுகள் போன்ற பல்வேறு கற்றல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஆசிரியர் மாணவர்கள் தொடர்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நேரடி வழிகாட்டிகள் மற்றும் ஆதரவை வழங்குகிறது


கலப்பு கற்றல் நன்மைகள்
.
  • மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கிறது. பல்வேறு கற்றல் முறைகள் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கிறது.
  • கற்றல் முடிவுகளை மேம்படுத்துகிறது. தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் மாணவர்களின் கற்றல் முடிவுகளை மேம்படுத்துகிறது.
  • நேரத்தை சேமிக்கிறது. மாணவர்கள் தங்களது சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ளலாம். இது நேரத்தை சேமிக்கிறது.
  • கற்றல் செலவுகளை குறைக்கிறது. இணையவழி கற்றல் செலவுகளை குறைக்கிறது என்று.

கலப்பு கற்றல் சவால்கள்.

1. தொழில்நுட்ப பிரச்சினைகள்
  • இணைய இணைப்பு பிரச்சினைகள்.
  • தொழில்நுட்ப கோளாறுகள்
  • மென்பொருள் பயன்பாட்டில் சிக்கல்,

2. மாணவர்கள் மாறுபட்ட திறன்கள்.
  • தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிரமப்படும் மாணவர்கள்.
  • சுய கற்றலில் ஆர்வம் இல்லாத மாணவர்கள்.
  • வெவ்வேறு கற்றல் வேகத்தைக் கொண்ட மாணவர்கள்.

3. ஆசிரியர்களின் தயார் நிலை.
  • தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பதில் சிரமப்படும் மாணவர்கள்
  • கலப்பு கற்றல் முறையை செயல்படுத்துவதற்கான பயிற்சி அற்ற ஆசிரியர்கள்

4. சமூக தொடர்புகளின் குறைவு
  • நேரடி வகுப்பறையில் கிடைக்கும் சமூக தொடர்புகள் இணையவழி கற்றலில் குறைவாக இருக்கும்.

5. வீட்டுச் சூழல்.
  • அனைத்து மாணவர்களுக்கும் போதுமான வீட்டுச் சூழல் கிடையாது. குடும்ப அங்கத்தவர்களின் ஆதரவு இல்லாத நிலை.

கலப்பு கற்றல் தொடர்பான சவால்களை எவ்வாறு சமாளிப்பது

  • தொழில்நுட்ப ஆதரவு
  • மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல்.
  • ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல்.
  • தனிப்பட்ட கற்றல்
  • சமூக தொடர்புகளை ஊக்குவித்தல்
  • வீட்டுச் சூழலை மேம்படுத்தல்

கலப்பு கற்றலை வெற்றிகரமாக சில காரணிகள் 

1.மாணவர்களுக்கான தயாரிப்பு

  • தொழில்நுட்ப திறன். மாணவர்கள் இணையவழி கருவிகளை பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும்.
  • சுய கட்டுப்பாடு கலப்பு கற்றலில் மாணவர்கள் தங்கள் கற்றல் வேகத்தில் செயல்பட வேண்டும். எனவே சுய கட்டுப்பாடு அவசியம்
  • தொடர்பு - மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

2. ஆசிரியர்களுக்கான தயாரிப்பு

  • தொழில்நுட்ப அறிவு ஆசிரியர்கள் இணைய கருவிகளை திறம்பட பயன்படுத்துவதற்கு தெரிந்திருக்க வேண்டும்.
  • பாடத்திட்ட வடிவமைப்பு கலப்பு கற்றலுக்கான பாடத்திட்டத்தை கவனமாக வடவமைக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்குதல் வேண்டும்.

கலப்பு கற்றல் வெற்றிக்கு உதவும் காரணிகள்.

  • தனியாக்கப்பட்ட கற்றல் ஒவ்வொரு மாணவரின் தேவைகளுக்கும் ஏற்ப கற்றல் அனுபவத்தை தனிப்பயனாக்க வேண்டும்.
  • தொடர்பாடல் ஆசிரியர் மாணவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் தொடர்பில் இருப்பது முக்கியம்.
  • மதிப்பீடு- மாணவர்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும்
  • தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நல்ல இணைய இணைப்பு மற்றும் தேவையான கருவிகள் இருப்பது அவசியம்

அறிஞர்களின் கருத்துக்கள்

மைக்கேல் ஹார்ன்

(கல்வி நெட்வொர்க்கை மாற்றுவதற்கு கலப்புக் கற்றல் சிறந்தது என்றும். விமர்சனமான சிந்தனைக்களை உருவாக்கும்.)

லாங்கோ

( E- புத்தகங்கள், விளையாட்டுகள், விடியோ படங்கள் மற்றும் டைனமிக் லேர்னிங் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.)


By : P. Lechchumi [Hinduism Course] 
Vavuniya National College of Education 



E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் - National Diploma in Teaching [ R ] வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ‌கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மிகவும் முக்கியமான பாட விடயங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் முறைகள், நுட்பங்களை என்பனவற்றை பதிவேற்றப்படும்.

Post a Comment

Previous Post Next Post